Today Rasi Palan, 2nd January 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
Rasi Palan 2nd January 2020: இன்றைய ராசி பலன், ஜனவரி 2, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
வெற்றிகரமான நாள். வாகனங்கள் வாங்கும் வாய்ப்பு உண்டாகும்.நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவீர்கள். தனிமையில் இருப்பதை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறவில் சிக்கல் நீங்கும். மகிழ்ச்சி பெருகும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
திருமணம் கைக்கூடும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒன்றை மனதில் கொள்ளுங்கள். இங்கே, யாருக்கும் எதுவும் நிரந்தரமல்ல... இன்று நீங்கள் விதைக்கும் விதை நாளை மரமாகும். ஆனால், அதன் காய்கள் உங்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதில் தான் பிரச்சனை.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நேரம் தவறாமல் உழைப்பீர்கள். அதற்கேற்ற ஊதியம் வந்து சேரும். அதில் தாமதம் ஏற்பட்டாலும் கவலை கொள்ள வேண்டாம். உங்கள் முயற்சி எதுவும் வீண் போகாது. சரியான திசையில் தான் பயணித்துக் கொண்டிருக்கிறீர்கள். பயம் வேண்டாம். பயணம் தொடரட்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். நீங்கள் விரும்பாவிட்டாலும், உங்களை ஆட்கொண்டு உங்கள் மேன்மையை அதிகரிக்கும், வருமானம் பெருகும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் நிலையை யாராலும் அசைக்க முடியாது.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
ஏழு கடலை தாண்டிய உற்சாகம் உண்டாகும். கடினமான பணிகளையும் ஜஸ்ட் லைக் தட் என்று கடந்து செல்வீர்கள். காதல் கைக்கூடும். திருமண உறவு தித்திக்கும். திருப்தியான நாள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
உடல்நலனில் அக்கறை வேண்டும். வீட்டுக்கு அருகில் உள்ள ஏதாவதொரு கோவிலுக்கு சென்று வழிபடுவது நல்லது. உணவில் கட்டுப்பாடு தேவை. கவனமாக இருக்க வேண்டிய நாள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
விலாவாரியாக எல்லாவற்றையும் விளக்கிக் கொண்டிருக்காமல், உங்கள் பணியை மட்டும் கவனியுங்கள். அரசுப் பணிகளுக்கு தயார் ஆகுபவர்கள், இன்று மறக்காமல் சிறிது நேரமாவது படித்தால் நல்லது. வெற்றி வந்து சேரும் நாள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
நண்பர்களின் ஆலோசனைக் கேட்டு நடக்க வேண்டும். திட்டம் போட்டு செலவுகளை சமாளியுங்கள். ஆடம்பரத்தை சற்று ஒதுக்கி வையுங்கள். எண்ணெய் சார்ந்த பலகாரங்களை இன்று ஒதுக்கினால் நல்லது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
பொய் சொல்வதை தவிர்க்கவும். கிரகங்கள் உங்களுக்கு எதிராக இருப்பதால், சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்புள்ளது. வாயுப் பிரச்சனை அதிகமாகும். அமைதியை கடைபிடியுங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
பழைய உடையை இன்று உடுத்த வேண்டாம். திருமணம் தொடர்பான தேடுதல் படலத்தில் நல்ல செய்தி கிடைக்கும். உடல்நலம் மேலோங்கும். சிக்கல்கள் குறையும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
செலவு கையைச் சுடும். உங்கள் திறமையான நிர்வாகத்தால் அதனை சமாளிப்பீர்கள். முப்பாட்டன் முருகனை மனதில் நினைத்து காரியங்களில் ஈடுபடுங்கள். வெற்றி நிச்சயம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
வெளிநாடு வாய்ப்பு தொடர்ந்து நீடிக்கிறது. காதலில் நல்ல பதிலை எதிர்பார்க்கலாம். வெற்றி எனும் தேவதை இன்று உங்களுடன் இருக்க விரும்புகிறாள்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.