Advertisment

Rasi Palan 30th September 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today, 30th September Rasi Palan in Tamil: இன்றைய ராசிபலன்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Today rasi palan, rasi palan june 16th, இன்றைய ராசிபலன்

Today rasi palan, rasi palan june 16th, இன்றைய ராசிபலன்

Today Rasi Palan, 30th September 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Advertisment

Rasi Palan 30th September 2019: இன்றைய ராசி பலன், செப்டம்பர் 30, 2019

ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

கற்பனை உலகில் இருந்து வெளியே வருவது நல்லது. கற்பனைக்கு விடைகொடுப்பதும் நல்லது. இனி செயலில் கவனம் செலுத்துங்கள். தவறுகளை நீங்களாக திருத்தாத வரை எதுவும் மாறப் போவதில்லை. நண்பர்களின் ஆலோசனைகளை இன்று அளவோடு ஏற்றுக் கொள்ளுங்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

கிரகங்கள் இன்று உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும். உங்களுக்கு பிடித்த பழக்கங்களை செய்யுங்கள். ஏனெனில், அவைதான் இன்று உங்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்கள் பொழுதுபோக்குகளை கொஞ்சம் ஒதுக்கி வைத்து, வேலையில் நாட்டம் செலுத்துங்கள். எதிர்பாராத திருப்பங்கள் வந்து சேரும் நாள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

உங்களில் இருக்கும் மன அழுத்தங்களை வெளிக்கொணரும் நேரம் இது. மற்றவர்களிடம் கடினமான தருணங்களை பகிர்ந்து கொள்ளுங்கள். உங்களது எமோஷனல் வெளிப்பாடு அதிகம் இருக்க வேண்டிய நாள் இது.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

எச்சரிக்கை மணி அடிக்கும் போதே உஷாரவது தான் உத்தமம். உங்கள் கனவுகளை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள். உங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை முதலில் அறியுங்கள். கவனமாக சூழ்நிலைகளை கையாளுங்கள்.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

எல்லாமே கடினமாக சென்றுக் கொண்டிருக்கிறதா? தெரிகிறது. ஆனால், நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். நிதிநிலை உங்கள் கையை கடிக்கும். ஆனால், அதையும் மீறி குடும்பத்தை நிர்வகிக்க வேண்டியது உங்கள் கைகளில் தான் உள்ளது.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

உங்களை சுற்றி உலவும் பாசிட்டிவ் விஷயங்கள், உங்களை பிரகாசமாக வைத்திருக்கும். இதனால், ஒவ்வொரு மணி நேரமும் உங்களுக்கு அழகாக தெரியும். நல்ல முடிவுகள் எடுப்பதற்கு நீங்கள் தான் முன்னெடுத்து செல்ல வேண்டும்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

நல்ல நேரத்திற்காக காத்திருக்க நேரிடும். காதல் கைகூடும். ஆனால், கவனம் தேவை. மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி, நல்ல வாழ்வை தொலைக்க வேண்டாம். தொலைந்தால் மீண்டும் வராது.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

சிறிய விஷயங்கள் எல்லாம் உங்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். உங்களுக்கு இருக்கும் தனிப்பட்ட சிக்கல்களை நண்பர்களுடனோ, துணையுடனோ பகிர்ந்து கவலையை விட்டு விலகுங்கள். உங்களால் எல்லாவற்றையும் செய்து முடிக்க முடியும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

வெற்றிகரமான நாள். வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு கிடைக்கும். பணவரவு இருக்கும். உங்களின் திடமான மனநிலை சூழ்நிலைகளை உங்களுக்கு சாதகமாக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும், அதற்கு முக்கியத்துவம் கொடுங்கள். சமூகம் சார்ந்த சூழல்களில் உங்கள் முகமும் தென்படும். இயற்கையான சூழலை நேசிப்பீர்கள்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

பணம் தொடர்பான சிக்கல்கள் தீரும். ஆனால், சில பண விவகாரங்களில் முடிவு எடுக்கும் போது ஜாக்கிரதையாக இருங்கள். குடும்ப உறவில் மகிழ்ச்சி உண்டாகும். கவனச் சிதறல்கள் நீங்கும்.

Midhunam Rasi Palan Kanni Rasi Palan Mesham Rasi Palan Kadagam Rasi Palan Thulam Rasi Palan Viruchigam Rasi Palan Dhanusu Rasi Palan Magaram Rasi Palan Kumbam Rasi Palan Simmam Rasi Palan Meenam Rasi Palan Rishabam Rasi Palan
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment