Today Rasi Palan, 4th July 2019 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 4th July 2019: இன்றைய ராசி பலன், ஜூலை 4, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
முடிந்து போன பழைய விஷயத்தை நினைத்து உங்கள் நேரத்தை வீணடிக்காதீர்கள். ஒரு விஷயம் முடிந்து விட்டது எனில், அதை மீண்டும் யாராலும் மாற்ற முடியாது. பழைய சோகக் கதைகளை நினைத்து உங்கள் எதிர்கால திட்டமிடலுக்கான நேரத்தை வீணடிக்க வேண்டாம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
உங்களது நேர்மை குணம், வெளிப்படையான பேச்சு, சிலருக்கு சில சமயத்தில் எரிச்சலைக் கொடுக்கலாம். அதனால் ஏற்படும் சிக்கல்களை எளிதாக களைவீர்கள். சில புதிய எலக்ட்ரானிக் சம்பந்தமான பொருட்களை வாங்குவீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உடல்நிலையில் லேசான சுணக்கம் ஏற்படும். சளித்தொல்லையால் அவதிப்படுவீர்கள். நீங்கள் ஒரு விஷயத்தை ஒரு மாதிரி பார்த்தால், அதே விஷயத்தை மற்றவர்கள் வேறு கோணத்தில் பார்ப்பார்கள், அணுகுவார்கள். ஆனால், வெற்றி உங்கள் பக்கமே.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
எப்பேற்பட்ட சிக்கல் வந்தாலும், அதனை சமாளித்து வெற்றி நடை போடுவீர்கள். கடினமான களங்களையும் உங்கள் மூளை வென்றெடுக்கும். உங்கள் திறமையால் எத்தனை எதிரிகள் வந்தாலும் சத்தமே போடாமல் தகர்த்தெறிந்து சென்றுக் கொண்டிருப்பீர்கள்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
குடும்ப விஷயங்களும், பொருளாதார ரீதியிலான சிக்கல்களும் உங்களை அதிகம் யோசிக்க வைக்கும். யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். இருப்பினும் பாதுகாப்பாக உணருவீர்கள். சில நாட்களுக்கு தர்மசங்கடமான சிக்கல்கள் நீடிக்கும்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
சூரியன் உங்களுக்கான சிக்கல்களில் ஏற்கனவே பாதியளவை தீர்த்து வைத்துவிட்டார். இனி உங்களது மன உறுதியும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இன்று உங்களுக்கான முழுமையான நாள் இல்லை என்றாலும், விரைவில் அதை எதிர்பார்க்கலாம்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
உங்களுக்கான இலக்கை நோக்கி துல்லியமாக முன்னேறிக் கொண்டிருப்பீர்கள். அதில் தடைகள் வந்தாலும் கவலைப்பட மாட்டீர்கள். ஆனால், கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாக இல்லாததால், பெரியளவில் உங்களை நேரம் ஒர்க் அவுட் ஆகாது. கவலை வேண்டாம். சுமாரான நாள் இன்று.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
பெற்றவர்களை இன்று அதிகம் மகிழ்ச்சி அடைய வைப்பீர்கள். உங்கள் செயல்களாலோ அல்லது உங்கள் சாதனைகளாலோ அது நிகழும். பண வரவு உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ப இருக்கும். செலவு செய்வதில் மட்டும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
சிறிய பிரச்சனைகளுக்கு எல்லாம் பெரிதாக ரியாக்ட் செய்ய வேண்டாம். உங்கள் இயற்கையான குனாதிசியமே உங்களுக்கு எப்போதும் கைக்கொடுக்கும் என்பதை மறக்க வேண்டாம்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
மறக்க வேண்டாம், இன்று உங்களைச் சுற்றி ஏற்படும் சிக்கல்களுக்கு நீங்கள் காரணமில்லை. எல்லாம் அதுவாகவே நிகழும். தலையில் கை வைத்து டென்ஷனோடு இருக்கும் உங்களுக்கு நிச்சயம் ஒரு டீ கிடைக்கும். குழம்ப வேண்டாம்.. எவ்வளவு பிரச்சனை வந்தாலும், அதற்கான தீர்வும் உங்களுக்கு உடனே கிடைக்கும்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்களின் தவறுகளை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். அதனால் உங்களுக்கு நிச்சயம் பயன் உண்டு. சரியான விகித கலவையில் உங்களின் வெற்றி, தோல்வி அமையும். கவலை வேண்டாம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
உங்களுக்கான நேரத்தை இனி எவரும் எடுத்துக் கொள்ள அனுமதிக்க மாட்டீர்கள். வெற்றி உறுதி. எனினும், தவறான இலக்கை நோக்கி பயனிப்பீர்கள். அதைக் கொஞ்சம் மாற்றினால் உங்களுக்கு தன நல்லது. எங்களுக்கு இல்லை.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.