Rasi Palan 5th February 2019: இன்றைய ராசிபலன்

Rasi Palan Today 5th February 2019: உங்கள் துணைக்காக செலவிட வேண்டிய நொடிகள், நிமிடங்கள், மணி நேரங்கள் இந்த நாளில் தான் அதிகம் உள்ளது...

Rasi Palan Today 5th February 2019 in Tamil: தீமைகளை அழித்து, நல்லவைகள் என்றும் நிலைநாட்டப்பட அனைவரின் மனதிலும் உறுதி வேண்டும். அந்த உறுதி இறுதியாக இருக்க வேண்டும். எப்பேற்பட்ட சூழலிலும் நெறிதவறாது நடத்தல் என்பது மனித குலத்தில் இருக்க வேண்டிய அடிப்படை தகுதி. தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.

Rasi Palan 5th February 2019 : இன்றைய ராசி பலன், பிப்ரவரி 5, 2019
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)

மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)

நம்பிக்கையுடன் இன்றைய நாளை தொடங்குவீர்கள். கடந்த சில நாட்களாக நீடித்துவந்த பதட்டம் இனி உங்களிடம் மிஸ் ஆகும். ஹேப்பி தான். சர்ச்சையான சில சம்பவங்களும் உங்களை விட்டு அகலும். நம்பிக்கை ப்ளஸ் மகிழ்ச்சியுடன் இன்று தினத்தை கடந்து செல்வீர்கள்.

ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)

உங்கள் துணைக்காக செலவிட வேண்டிய நொடிகள், நிமிடங்கள், மணி நேரங்கள் இந்த நாளில் தான் அதிகம் உள்ளது என்றால் நம்புவீர்களா? ஆம்!. குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உங்கள் துணையை நேசிப்பீர்கள்.

மிதுனம் (மே 22 – ஜூன் 21)

உங்களுக்கு நெருக்கமானவர்களே உங்களை புரிந்து கொள்ள சிரமப்படுவார்கள். சில விருப்பமில்லாத நிகழ்வுகள் அரங்கேற வாய்ப்புள்ளது. இதனால், மனம் நொந்து காணப்படுவீர்கள். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுங்கள்.

கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)

தவிர்க்க முடியாத சில விஷயங்களை நீங்கள் மற்றவர்களுக்காக செய்ய நேரிடும். அதனால் சில விளைவுகளையும் சந்திக்க நேரிடும். முடிவில், உங்கள் சாதுர்யத்தால் தடைகளை தகர்ப்பீர்கள். அதனால் பாராட்டும் பெறுவீர்கள்.

சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)

சில மருத்துவ செலவுகள் ஏற்படும் முன்னரே, அதை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் நல்ல பெயர் எடுப்பீர்கள். குடும்பத்தில் சிறியளவு பிரச்சனை வந்து போகும். சுமாரான நாள் உங்களுக்கு.

கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)

கிரக அமைப்பு நிலைப்படி, இன்று தானம் வழங்குங்கள். உங்களின் ஆரோக்யமும், நிதி நிலைமையும் மேம்படும். திருமணம் ஆகாமல் இருப்பவர்கள், வாராவாரம் வெள்ளியன்று விரதம் இருப்பது பலன் தரும். பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்து கொள்ளுங்கள்.

துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)

வாழ்வில் உங்கள் பொறுப்புகள் அதிகமாகும். இது உங்களுக்கு சிறிது பதட்டத்தை ஏற்படுத்தும். குழப்பம் ஏற்படாதபடி தெளிவான இலக்குகளை அமைத்துக் கொள்ளுங்கள். உங்கள் செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்க பரிகாரம் மேற்கொள்ளவேண்டியிருக்கும். இறைவழிபாடு மற்றும் சிறப்பான திட்டம் மூலம் செலவுகளை கட்டுப்படுத்தலாம்.

விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)

சிலரை புரிந்து கொள்வது மிகக் கடினம். இன்றைய நாள் உங்களுக்கு அப்படியானதாக இருக்கப் போகிறது. எங்கிருந்து பிரச்சனை வருகிறது என்று தெரியாத அளவிற்கு இன்னல்கள் ஏற்படலாம். ஆனால், அவற்றை உங்கள் சாதுர்யத்தால் முறியடிப்பீர்கள்.

தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)

இன்று உங்களிடம் ஆற்றல் நிறைந்து காணப்படும். கடினமான பணிகளைக் கூட எளிதாக குறித்த நேரத்திற்கு முன் முடிப்பீர்கள். இன்று உங்கள் தேவைகளை பூர்த்தி செய்யம் அளவிற்கு பணப்புழக்கம் காணப்படும். உங்கள் சேமிக்கும் திறன் அதிகரிக்கும்.

மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாள். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக் கொள்ளுங்கள். முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நாள். இன்று நிதிநிலையில் நம்ப முடியாத அளவு பலன் இருக்கும். உங்கள் சொத்துக்கள் அதிகரிக்கும்.

கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)

இன்றைய நாள் அமைதியாக இருக்க பிரார்த்தனை மற்றும் தியானம் மேற்கொள்ளுங்கள். அதிக தண்ணீர் குடிப்பதும் எண்ணெய் பதார்த்தங்கள் தவிர்ப்பதும் உங்கள் ஆரோக்கியத்திற்கு சிறந்தது. ஆரோக்கியத்தை கவனிக்காமல் விட்டால் தோல் சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும்.

மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)

முன்னேற்றம் உங்களை மகிழ்விக்கும். மேலதிகாரிகளுடன் நல்ல பெயரை பெறுவீர்கள். யாரையும் புண்படுத்த தெரியாத உங்களுக்கு இன்றைய நாளில் வெற்றி தேடி வரும். இன்பமான நாள்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Horoscope news in Tamil.

×Close
×Close