Today Rasi Palan, 7th May 2020 Rasi Palan: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ்.இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 7th May 2020: இன்றைய ராசி பலன், மே 07, 2020
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
வெளிப்படையாக இருக்க வேண்டும், அடுத்த வாய்ப்பு உங்களுக்கு எப்போது கிட்டும் என்பது உங்களுக்கு தெரியாது. மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை நீங்கள் காது கொடுத்து கேட்க வேண்டும். வாய்ப்புகள் வந்து குவியும் நாள்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
தேவைக்கேற்ப உங்கள் பணிகளில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்வது சிறந்தது. நேரத்தை வீண் செய்யாமல், பயனுள்ளதாக மாற்றுவதில் கவனம் செலுத்துங்கள். செலவுகளின் சிக்கனம் காட்டுவது சிறந்தது.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
நான் தான் என்ற உங்கள் எண்ணம் சில சரிவுகளை ஏற்படுத்த வழிவகுக்கும். வாய்ப்புகள் கை நழுவிப் போகலாம். எச்சரிக்கையுடன் ஒவ்வொரு விஷயத்தையும் அணுகுங்கள்,
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
நீங்கள் உங்கள் சிங்கமுகத்தை வெளிக்காட்டுவீர்கள். இருப்பினும், சமீப காலங்களில் உங்களுக்கு ஏற்பட்ட அனுபவம், வருங்காலத்தில் நேர்மையுடனும், உண்மையுடனும் இருக்க வழிவகுக்கும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
வெற்றி உறுதி என்பது தெரியும் வரை போருக்க செல்ல வேண்டாம் என்று கூறுவது தான் தான் தலைவனின் அறிவுரை. உங்களின் முயற்சிகள் தோல்வி அடைவதற்கும் இதுவும் ஒரு காரணம். ஏன் என்பதை மேற்சொன்ன வாக்கியத்தில் இருந்தே தேடுங்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
சூழலுக்கு ஏற்ப உங்களின் தகவமைத்துக் கொள்ளும் திறமை பல சந்தர்ப்பங்களில் உங்களை காப்பாற்றி இருக்கலாம். ஆனால், எல்லா இடத்திலும் அது கைக்கொடுக்காது. உங்கள் துணையின் தேவை என்ன, குடும்பத்தின் தேவை என்ன என்பதை நினைவில் நிறுத்துங்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
எப்போதும் வாழ்க்கையை சீரியஸாக பார்ப்பதை நிறுத்துங்கள். உங்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த சில திறமையான முயற்சிகள் தான் தேவையே தவிர, மன அழுத்தம் என்பது எப்போதும் தேவையற்றது. கடினமான சூழல்கள் எப்போதும் எல்லோருக்கும் இருக்கும் என்பதை நினைவில் கொள்க.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
போராட்ட குணம் உங்களுக்கு இயற்கையில் இருக்கும். உங்களது வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. ஆனால், அது வந்து சேருவது கொஞ்சம் தாமதமாகலாம். கோயிலுக்கு சென்றால், பூசாரியின் காலில் விழுந்து வணங்குங்கள். பூர்வ பாவங்கள் கழியும்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
குழந்தை பாக்கியம் உண்டாகும். யாருக்காகவும், எதற்காகவும் அஞ்ச வேண்டாம். உண்மை உங்கள் பக்கமே. அனாவசிய பேச்சுகளை தவிர்த்து செயலில் கவனமாக இருங்கள். வெற்றி உறுதி.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
இன்று கோவில் சென்று சம்பிரதாய முறைப் படி வழிபாட்டில் ஈடுபடுவீர்கள். இதன் மூலம் அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளிப் போடவும். இன்று செலவுகள் அதிகமாக இருக்கும். உங்கள் தேவைகளை பூர்த்தி செய்ய சிறிய அளவில் கடன் வாங்குவீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
தேவையற்ற மனக் குழப்பங்கள் ஏற்படலாம். அதை நம்பிக்கையுடன் தகர்த்திடுங்கள். நிதிநிலைமை சறுக்கினாலும் அதை சமாளிக்கும் திறன் கொண்டிருப்பீர்கள். நண்பர்களின் ஆலோசனையை எடுத்துக் கொள்ளுங்கள். வீண் விவாதம் வேண்டாம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
பணி நிமித்தம் குடும்பத்தை விட்டு விலகியிருக்க நேரிடும். கடினமாக உழைப்பதன் மூலம் வெற்றி காண்பீர்கள்.பணியிடச் சூழல் சிறந்த செயல்திறன் ஆற்ற சாதகமாக இருக்கும். உங்கள் வேலைத் தரம் உங்களின் திறமையை பறைசாற்றும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil