Rasi Palan Today 24th October 2018 in Tamil: : இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழின் புதிய அறிமுகமாக ‘இன்றைய ராசிபலன்’ எனும் புதிய பிரிவை வாசிப்பாளர்களுக்கு அளிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
தேடல் என்றும் தீராத ஒன்று. அந்த தேடல் ஆன்மீகமானாலும், விஞ்ஞானம் ஆனாலும் இன்னும் சென்றுக் கொண்டே இருக்கிறது. கடவுளை நம்புபவர்கள் கூட ஆண்டவனை எப்போதாவது தான் நினைப்பார்கள். கடவுளை நம்பாதவர்களே ஆண்டவனை எப்போதும் நினைக்கிறார்கள்.
Rasi Palan 24th October 2018 : இன்றைய ராசி பலன் 24 அக்டோபர் 2018
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20)
உலகமே உங்கள் காலடியில் இருப்பது போன்று தோன்றும். இதனால், உங்களில் கவனச்சிதறல் ஏற்படலாம். இதைத் தவிர்க்க, மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது அவசியம்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21)
உங்கள் இலக்குகளை நிறைவேற்ற கடவுள் வழிபாடு அவசியம். சொந்த விவகாரங்களில் கூடுதல் அக்கறை தேவை. குறிப்பாக, உறவுகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தருணங்களை தவறவிட்டு விடாதீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21)
உங்களது நீண்டகால நிதி சேமிப்பு திட்டங்கள் உங்களது பொருளாதார நிலையை வெற்றிகரமாக கொண்டுச் செல்லும். தெளிவான சிந்தனையுடன் செயல்படுவீர்கள். உங்களது தனித்திறமை மூலம் மற்றவர்களை விட வேறுபட்டு தெரிவீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23)
கிரக நிலைகள் உங்களுக்கு சாதகமாகவே உள்ளன. இன்று வெற்றிகள் உங்களைத் தேடி வரும். உங்கள் முடிவுகளில் தெளிவும், சூழ்நிலைகளை உங்களால் முழுவதும் ஆக்கிரமித்து அதனை உங்களால் கையாள முடியும். பொறுப்புகள் கூடும். அதனால் வேலைப்பளுவும் கூடும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23)
அடுத்து உங்கள் செயல்பாடு என்ன என்பதை முடிவு செய்ய மிகச் சரியான தருணம் இது. எதையும் அப்படி இருக்குமோ, இப்படி இருக்குமோ என்று யோசித்துக் கொண்டிருக்காமல், களமிறங்கி செயல்படத் தொடங்குங்கள். உண்மையாக செயல்படுவீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23)
தேவையில்லாத விவாதங்கள் மற்றும் பிரச்சனைகள் மூலம் உங்கள் இன்பங்கள் எங்கே முடிவுற்றது என தேடும் நிலை ஏற்படும். இதற்கு உடனடி தீர்வு காண்பதை விட, நீண்ட கால நிவாரணி காண்பதே சிறந்தது. உங்களே நீங்கள் மிகவும் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். சில தருணங்களில் நீங்களே பிரச்சனையை மோசமாக்கி விளைவை அனுபவிப்பீர்கள்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23)
தடைகளையும், சட்டங்களையும் உடைத்து எறிவீர்கள். ஆனால், சட்டத்தின் மாண்பை கடைபிடியுங்கள். உங்கள் இலக்குகளை எட்ட மேலும் கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். வழக்கமான பாணியையே கடைப்பிடித்து, அழுத்தங்களுக்கு ஆளாகாதீர்கள்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22)
உங்களுக்கு ஏற்பட்டிருந்த பிரச்சனைகளும், தொல்லைகளும் வேக்வம் கிளீனர் கொண்டு துடைத்தது போல சுத்தமாக துடைத்து எடுக்கப்படும். சந்திரன் உங்களுக்கு சாதகமாக இருக்கிறார். உங்கள் மனதில் தோன்றியதை பேசிவிட்டு, பின்பு வருத்தம் தெரிவிக்கிறேன் என சொல்லாதீர்கள்.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22)
இன்று நீங்கள் பதட்டத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். வளர்ச்சி குறித்த உங்கள் முயற்சிகளில் முன்னேறிச் செல்லுங்கள். உங்கள் மனதில் நம்பிக்கையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் துணையுடன் சகஜமான அணுகுமுறை மேற்கொள்ள வேண்டும்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20)
இன்று உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். உங்களின் அமைதியான மனநிலை காரணமாக நீங்கள் இன்று முக்கிய முடிவுகளை எடுக்கலாம். இன்று பணப்புழக்கம் சீராக இருக்கும். உங்கள் நிதி வளர்ச்சியை கணிசமாக மேம்படுத்துவீர்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19)
உங்களது தவறான முடிவுகள் சில மோசமான விளைவுகளை உங்கள் முன்னேற்றத்தில் ஏற்படுத்தும். செயல்களை சீராக மேற்கொள்ள நீங்கள் மிகவும் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இன்று நீங்கள் நம்பிக்கை இழப்பீர்கள். எனவே உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20)
உங்களது ஆட்சி கிரகநிலை அதன் நிலையை மாற்றிக் கொள்ளும். உங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். ஆனால், அது பயனுள்ளதாகவே இருக்கும். மேலும் சில மாதங்களுக்கு நீங்கள் அமைதியாக இருக்க வேண்டியது அவசியம்.