Rasi Palan 23rd October 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 23rd October 2021: இன்றைய ராசி பலன், அக்டோபர் 23ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
இதுவரை முக்கியத்துவமில்லாமல் இருந்த வியாழன் இனிமேல் செயல்பட காத்திருக்கிறது. குடும்ப ஏற்பாடுகள் அல்லது வீட்டு முன்னேற்றங்கள் பாதிக்கப்பட்டிருந்தால் மனச்சோர்வடைய வேண்டாம். இதுபோன்ற விஷயங்கள் தொடர இன்னும் நேரம் வரவில்லை. ஆனால், சரியான நேரம் எப்போது என்பது நிச்சயமாக உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
உங்களுடைய அணுகுமுறைகளை மாற்றிக்கொள்ள இன்று நல்ல நாள். கடந்த 24 மணி நேர நிகழ்வுகள் உங்களை மீண்டும் சிந்திக்க தூண்டியிருக்கலாம். இருப்பினும், பாலைவனத்தில் கானல் நீர் போல இன்றைய பிரச்சினைகள் விரைவாக மறைந்துவிடும். அதைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
பல எரிச்சலூட்டும் கிரக அமைப்புகளால் பயணத் திட்டங்கள் குறுக்கிடப்படலாம் அல்லது தாமதமாகலாம். சில செயற்கையான தோல்விகளைக் காட்டிலும் தவறான புரிதல்கள், சிரமங்களுக்கு காரணமாக இருக்கலாம். அதனால்தான், நீங்கள் முக்கியமான ஏற்பாடுகளை ஒரு முறைக்கு இரண்டு முறை சரிபார்த்து பார்த்து செய்ய வேண்டும்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
சில மோசமான கேள்விகளுக்கு நீங்கள் பதிலளித்த பின்னர், உங்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். எனவே, நிதி சம்பந்தமான அக்கறையை பின்னால் வைக்கலாம். உங்கள் வாழ்க்கையின் எல்லாப் பகுதிகளிலும் உண்மையான சமமான, சுதந்திரமான மற்றும் திறந்த கூட்டுறவு என்பதே எதிர்கால வெற்றி மற்றும் மகிழ்ச்சிக்கான திறவுகோலாக இருக்கும்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
சில நேரங்களில் நீங்கள் ஒரு போராட்டத்தை சந்திக்கிறீர்கள். ஆனால், நீங்கள் கடந்த காலங்களில் போதுமான அளவுக்கு பாதிக்கப்பட்டுவிட்டீர்கள். அதனால், மீண்டும் அப்படியான பிரச்னைக்கு செல்ல விரும்பாதீர்கள். எனவே, சமீபத்திய சர்ச்சைக்குரிய பிரச்சினைகளில் இருந்து விலகி புதிய மற்றும் நம்பிக்கையான பாதையில் செல்ல முடிவு செய்யலாம். மற்றபடி யாரும் உங்களுக்கு அறிவுரை சொல்ல விடாதீர்கள்!
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
மொத்தத்தில் ஒரு வெற்றிகரமான வாரத்திற்காக உங்களை வாழ்த்து சொல்லலாம். சந்திரன் ஒரு சக்திவாய்ந்த பாத்திரத்தை வகிக்கிறது. இது உங்கள் பல உலக சாதனைகளை நிறைவு செய்ய உணர்ச்சி அரவணைப்பு மற்றும் பாதுகாப்பு உணர்வை கொண்டு வர வேண்டும். இத்தகைய அதிர்ஷ்ட நட்சத்திரங்களை பாராட்ட வேண்டும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
உங்களில் பலர் சமீபத்திய உணர்ச்சி சந்திப்புகளுக்குப் பிறகு பரவச உணர்வை அடைந்திருக்கலாம். மற்றவர்கள் சமநிலையை இழந்திருக்கலாம். ஆனால், நீங்கள் தொடர்ந்து படைப்புத் திறன் நிகழ்வுகளிலிருந்து பயனடைவீர்கள். நீங்கள் தோல்வியடைந்தாலும் மீண்டும் முதலில் இருந்து தொடங்கி உங்கள் குழந்தைப் பருவ கனவை நிறைவேற்றலாம்.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
நீங்கள் வேலை செய்பவராக இல்லாவிட்டால், வார இறுதியில் தொழில்முறை சிக்கல்களைச் சமாளிக்க நல்ல நேரமாக இருக்காது. கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களாக எழுந்த குடும்பம் மற்றும் வீட்டு வாய்ப்புகளுக்கு உங்கள் கையை திருப்பி புதிய ஓய்வு ஈர்ப்பை அனுபவிப்பது மிகவும் நல்லது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
சந்திரன் நிலைகளை மாற்றி, உங்கள் ஆன்மாவின் மீது அதன் உணர்ச்சி சக்தியை சரிசெய்யும்போது, மதிய வேளையில் நீங்கள் மனநிலை மாற்றத்தை அனுபவிப்பீர்கள். இது உங்கள் திட்டங்களில் மாற்றத்தை ஏற்படுத்தலாம். ஆனால் மற்றவர்களுக்கு தகவல் தெரிவியுங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
இன்று காலையில் வெளியே இருந்து நிதி விஷயங்களைப் பெறுவீர்கள். சந்திரன் இப்போது இதுபோன்ற சாதாரண விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு, நீங்கள் உண்மையில் என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று சிந்திக்க வேண்டும் என்று கேட்கிறது. உங்களுடைய எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கலாம். அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை என்று இளைய உறவுகளுடன் கலந்தாலோசியுங்கள்.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
முக்கிய திட்டங்களில் இன்னும் சில குழப்பங்கள் உள்ளன. நீங்கள் விரும்பியபடி உங்களால் இன்னும் பயணிக்க முடியாவிட்டாலும், அல்லது ஒரு முக்கியமான ஒப்பந்தத்தை நீங்கள் தள்ளிவைக்க வேண்டியிருந்தாலும், நீங்கள் சரியான கேள்விகளைக் கேட்கும் வரை, உங்கள் தற்போதைய போக்கில் தொடரலாம்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
வாழ்க்கையில் உங்களுடைய பெரும் போராட்டங்களில் ஒன்று மிகவும் நடைமுறை ரீதியாக இருப்பது மற்றும் கொஞ்சம் ஒழுங்கில்லாமல் இருப்பது எப்படி என்று கற்றுக்கொள்வதுதான். இப்போது சந்திரன் அதன் நிலையை மாற்றிக்கொண்டிருப்பதால், கொஞ்சம் அத்தியாவசியமான வேலைகளைச் செய்யுங்கள். வீட்டை மேம்படுத்தலாம் அல்லது ஒரு பெரிய புதிய திட்டத்திற்கான அடித்தளத்தை அமைக்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“