Rasi Palan 5th October 2021: ராசிபலன் ஜாதகம் அல்ல. நம் கிரக நிலைகளின் அடிப்படையில் கணிக்கப்படும் ஒரு நம்பிக்கை. நம் அன்றாட வாழ்க்கை பயணத்தில் நிகழக் கூடும் மாற்றங்களை அறியும் நம்பிக்கை இது. உங்கள் தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸ் தளத்தின் மூலம் நீங்கள் உங்களது தினசரி பலனை தெரிந்து கொள்ளலாம்.
Rasi Palan 5th October 2021: இன்றைய ராசி பலன், அக்டோபர் 5ம் தேதி 2021
ராசி (குறிப்பிட்ட நாட்களில் அந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்)
மேஷம் (மார்ச் 21 – ஏப்ரல் 20) :
எதிர்காலத்தில் உங்களுக்கு உதவக்கூடிய ஒருவரை நீங்கள் எங்கேயோ வருத்தப்படுத்தியதாகத் தெரிகிறது. நடுங்கும் உறவுகளை உறுதியான நிலைக்கு கொண்டு வருவதற்கு இதுதான் சரியான நேரம். வேலையில் நீங்கள் இன்னும் ஆக்கப்பூர்வமான படிப்பினைப் பெற வேண்டும். நீங்கள் கற்றுக்கொள்ளக்கூடிய புதிய திறன் இருக்கிறதா என்பதும் கேள்விதான்.
ரிஷபம் (ஏப்ரல் 21 – மே 21) :
நிதி விவகாரம் நிச்சயமற்றதாக உள்ளது. ஏனெனில் உங்கள் வாய்ப்பை நழுவவிடலாம். நம்பிக்கை எல்லாம் நன்றாக இருக்கிறது. ஆனால் நம்பத்தகாத நம்பிக்கைகள் உங்கள் செயல்களை பாதிக்க அனுமதிக்காதீர்கள். நீங்கள் குழப்பமாக இருக்கும்போது யதார்த்தத்தை நோக்கி காலடி எடுத்து வையுங்கள்.
மிதுனம் (மே 22 – ஜூன் 21) :
வியாழனுக்கும் சனிக்கும் இடையிலான தற்போதைய உறவு சந்தேகமே இல்லாமல் நேர்மறையானது. நீங்கள் உங்கள் வியாபார நோக்கத்தில் இல்லை என்று உணர்ந்த திட்டங்களைச் செயல்படுத்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். ஒரு மாதத்திற்குள் சில தற்போதைய பிரச்சனைகள் இருந்ததை நீங்கள் மறந்துவிடுவீர்கள்.
கடகம் (ஜூன் 22 – ஜூலை 23) :
உணர்ச்சிப்பூர்வமான சந்திரன் இப்போது உங்கள் ராசியின் ஒரு நேசமான பகுதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மற்றவர்களுடனான தொடர்புகளிலிருந்து, குறிப்பாக நன்றாகத் தெரிந்தவர்களிடமிருந்து நீங்கள் பெற வேண்டிய நிறைய உள்ளன என்பதை வெளிப்படுத்துகிறது. வேலையில்கூட நீங்கள் ஒரு குழுவின் பகுதியாக செயல்பட வேண்டும். நீங்கள் தனியாகச் சென்றால் நீண்டகால சேதம் ஏற்படலாம்.
சிம்மம் (ஜூலை 24 – ஆகஸ்ட் 23) :
நீங்கள் கடந்து வந்த காலம் முற்றிலும் உங்களுக்குப் பிடித்ததாக இல்லை. இருப்பினும், ஒவ்வொரு ஜோதிட குழப்பத்திலும் நம்பிக்கை கீற்று உள்ளது. மிக விரைவில் சமீபத்திய மனக்கசப்புகளிலிருந்து அடைந்த விஷயங்கள் சாதாரணமாகிவிடும். இறுதியில், நீங்கள் காத்திருப்பது மதிப்புக்குரியது என்று முடிவு செய்வீர்கள்.
கன்னி (ஆகஸ்ட் 24 – செப்டம்பர் 23) :
இந்த நேரம் மோசமாக கருதப்படுவதற்கு எந்த காரணமும் இல்லை என்றாலும், வீட்டில் பதட்டங்கள் உருவாகின்றன. உங்கள் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே சென்று முன்னேற்றங்களை அடைய உங்களை கட்டாயப்படுத்தும் எதுவும் வரவேற்கத்தக்கது. வீட்டில் விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக நடந்து கொண்டிருப்பதாகத் தோன்றுகிறது. எனவே ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அது உங்களுடைய பொறுமையின் விளைவாக இருக்கும்.
துலாம் (செப்டம்பர் 24 – அக்டோபர் 23) :
சமீபத்தில் உங்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் கிரகமான சுக்கிரன் ராசியில் நீங்கள் பிறந்திருப்பது அதிர்ஷ்டம். இருப்பினும், இப்போது, நீங்கள் உங்களுடைய சொந்தக் காலில் நிற்க கற்றுக்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கூட்டாளிகளைச் சார்ந்து இருப்பது நல்லது. ஆனால், அது எல்லா நேரத்திலும் இல்லை.
விருச்சிகம் (அக்டோபர் 24 – நவம்பர் 22) :
நீங்கள் ரகசிய தகவலை வைத்திருக்கலாம் அல்லது நண்பரின் சார்பாக இரகசியங்களை வைத்திருக்கலாம். இருப்பினும், இந்த வாரம் முடிவதற்குள் எல்லாம் வெளிப்படையாக இருக்க தயாராக இருங்கள். கூட்டாளிகள் உங்களை விட்டு வெளியேற எந்த வழியும் இல்லை. எனவே உங்கள் கதையை தயார் செய்வது நல்லது.
தனுசு (நவம்பர் 23 – டிசம்பர் 22) :
உங்கள் ராசியில் ஒரு முக்கியமான கிரக அமைப்பு வேகமாக இருப்பதால், நீங்கள் கவனமாக நடக்க வேண்டும். எதிர்காலம் குறித்த உங்கள் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்வது அவசியம். ஆனால், உங்கள் தோல்வி அதிக நம்பிக்கையாக இருக்கலாம். எல்லாவற்றையும் இரண்டு முறை சரிபாருங்கள்.
மகரம் (டிசம்பர் 23 – ஜனவரி 20) :
இன்றைய சந்திர கிரக நிலைகள் நெருங்கிய நண்பர்களிடம் உதவி கேட்க உங்களுக்கு வலுவான ஆலோசனைகளை வழங்குகின்றன. அவர்களின் யோசனைகளின் தரத்தைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். அவற்றின் முடிவுகளால் மிகவும் மகிழ்ச்சியுடன் ஆச்சரியப்படுவீர்கள். உங்கள் மற்ற கிரகங்கள் பண வெற்றிக்கு வழி காட்டுகின்றன.
கும்பம் (ஜனவரி 21 – பிப்ரவரி 19) :
உங்கள் நடத்தை குறித்து விமர்சன ரீதியாக கருத்து தெரிவிக்கும் உரிமை இருப்பதாக மற்றவர்கள் உணரும்போது அது மிகவும் நியாயமற்றதாகத் தோன்றும். இருப்பினும், இன்றும் நாளையும் இதுதான் நடக்க வாய்ப்புள்ளது. எனவே, கோபப்படாமல் நேரம் வரும் வரை காத்திருப்பதன் மூலம் உங்களுக்கு தேவையான அனைத்தையும் பெறுவீர்கள்.
மீனம் (பிப்ரவரி 20 – மார்ச் 20) :
உங்கள் ராசிக் கட்டத்தில் ஒரு தொழில்முறை வருத்தம் உள்ளது. ஆனாலும், மாற்றங்கள் உங்கள் விருப்பப்படி இருக்கலாம். வார இறுதியில் சந்திப்புகள் அல்லது தகவல்தொடர்புகள் விஷயங்களைத் தெளிவுபடுத்தலாம். எனவே, காட்டப்படும் ஒப்பந்தங்களில் கையொப்பமிட வேண்டாம். உண்மையில், அடுத்த ஆண்டு வரை எந்த கம்மிட்மெண்ட்டும் தேவையில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“