107 ஆண்டுகளாக பழங்குடிகளை நகரங்களோடு இணைத்த ரயில்; சேவை நிறுத்தம்!

பழங்குடிகள் தங்களின் நிலங்களில் விளைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர விவசாய பொருட்களை விற்பனை செய்ய இந்த ரயில் பயன்படுத்தப்பட்டது.

பில்லிமோரா – வகாய் ஹெரிட்டேஜ் ரயில் சேவை மேற்கு ரயில்வேயில் இருக்கும் 11 நாரோ கேஜ் ரயில் சேவைகளில் ஒன்றாகும். இந்த ரயில் சேவையில் பெரிதாக பயன் ஏதும் இல்லை என்று கூறி ரயில் சேவையை நிறுத்தியுள்ளது மத்திய ரயில்வே அமைச்சகம்.

1913ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் இந்த ரயில் சேவை துவங்கப்பட்டது. இவை அந்த பகுதிகளில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு பெரிதும் உதவும் வகையில் இருந்தது. கொரோனா தொற்று நோய் காரணமாக நிறுத்தப்பட்ட ரயில் சேவை அத்தோடு தனது இறுதி பயணத்தையும் நிறுத்திக் கொண்டதாக தெரிகின்றது.

இந்த ரயில் சேவை வல்சாத் மாவட்டத்தின் பில்லிமோராவையும் தங்கஸ் மாவட்டத்தின் வகாய் மாவட்டத்தையும் இணைக்கும் 63 கி.மீ இடைவெளியை நிரப்பும் சேவையாக இருந்தது.

பழங்குடிகள் தங்களின் நிலங்களில் விளைந்த பழங்கள், காய்கறிகள் மற்றும் இதர விவசாய பொருட்களை விற்பனை செய்ய இந்த ரயில் பயன்படுத்தப்பட்டது. ரூ. 15 தான் டிக்கெட் கட்டணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் சேவைகள் தற்போது  நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அந்த பகுதியில் வாழும் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: 107 yr old billimora waghai heritage train stops its service

Next Story
இந்தியர்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் புதிய நாடாளுமன்றம் – நரேந்திர மோடிNew Parliament building will reflect the aspiration of Indian youths says Modi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com