தில்லியில் பணம் வேனில் 2 ஊழியர்களை சுட்டுக் கொன்று 12 லட்சம் கொள்ளை

தில்லி பணம் கொண்டு சென்ற வங்கி வேனில் இருந்த 2 ஊழியர்களைச் சுட்டுக்கொன்று ரூ.12 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தில்லியில் தொழில் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுக்கழகம் சார்பில் மதுக்கடைகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்தக் கடைகளில் இருந்து பணத்தை வசூல் செய்ய ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவ்வாறு அங்குள்ள நரேலா பகுதியில் இயங்கி வரும் மதுக்கடை ஒன்றில் இருந்து பணத்தை வசூல் செய்ய நேற்று மதியம் வேன் வந்தது. அதில் காசாளர் ரஜினிகாந்த் மற்றும் பாதுகாவலர் பிரேம் குமார் ஆகியோர் இருந்தனர்.
அப்போது மோட்டார் சைக்கிள் ஒன்றில் அங்கு வந்த 3 பேர் திடீரென ரஜினிகாந்த் மற்றும் பிரேம் குமார் ஆகியோரைத் துப்பாக்கியால் சுட்டனர். பின்னர் வேனில் இருந்த ரூ.12 லட்சத்தை அந்த நபர்கள் கொள்ளையடித்து சென்றனர். நேற்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் அப்பகுதியே அதிர்ச்சியில் ஸ்தம்பித்தது.

கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டதில் படுகாயமடைந்த ரஜினிகாந்த் மற்றும் பிரேம் குமார் ஆகியோரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ராஜா ஹரிஸ்சந்திரா மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்குச் சிகிச்சை பலனின்றி இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

அடுத்தடுத்து நடைபெற்று வரும் கொள்ளை சம்பவங்களால் நாடு முழுவது பதற்றம் நிலவுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

×Close
×Close