தொடரும் அட்டகாசம்; நான்கு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானில் இருந்து, இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவி தாக்குதல் நடத்துவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் ராம்பூர் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற நான்கு பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் இன்று சுட்டுக்கொன்றது.

ராம்பூர் செக்டார் வழியாக இந்திய பகுதிக்குள் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவுவதை இந்திய ராணுவம் கவனித்தது. இதையடுத்து அந்த பயங்கரவாதிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும் பயங்கரவாதிகள் அப்பகுதியில் உள்ளனரா? என்று பாதுகாப்பு படையினர் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

×Close
×Close