Advertisment

ஆந்திராவில் 40 சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா: சுகாதாரத்துறை ஷாக்

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 25 குழந்தைகள், தெலுங்கானா தலைநகரில் அமைந்திருக்கும் காந்தி மருத்துவமனையில் குணமடைந்து  வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஆந்திராவில் 40 சிறுவர், சிறுமிகளுக்கு கொரோனா: சுகாதாரத்துறை ஷாக்

ஆந்திரா மாநிலத்தில் 3 முதல் 17 வயதுக்குட்பட்ட 40 குழந்தைகளுக்கு இதுவரை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 40 குழந்தைகளையும் சேர்த்து, ஆந்திராவில் ஏப்ரல் 15ம் தேதி நிலவரப்படி, 475 பேர் கொரோனா வைரஸ் தொடர் சிகிச்சையில் இருந்து வருகின்றனர்.

Advertisment

மார்ச் மாதம் டெல்லி நிஜமுதீனில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் கூட்டத்தில் கலந்து கொண்ட குடும்ப உறுப்பினர்களிடமிருந்து, இந்த 40 குழந்தைகளுக்கும் வைரஸ் தொற்று பரவியதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். "ஜமாத் மாநாடு சென்று திரும்பியவர்களில் பெரும்பாலானோர்கள், தங்களின் தொற்று குறித்து அறிந்திருக்கவில்லை. இந்த கவனக்குறைவின் மூலம், தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்களுக்கும் வைரஸ் தொற்று பரவியது. அதில், பெரும்பாலானவர்களில் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது" என்று அதிகாரி  ஒருவர் தெரிவித்தர்.

பாதிக்கப்பட்டவர்களில்,பெண்களின் எண்ணிக்கை  மட்டும் 124-க உயர்ந்துள்ளது."சில சந்தர்ப்பங்களில் இல்லத்தரசி, பாட்டி, மகள், சகோதரி என  குடும்பத்தில் உள்ள அனைத்து பெண் உறுப்பினர்களும், ஆண்கள் மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும், ஆந்திரா மாநிலத்தில், கொரோனா தொற்று கொண்ட 36 நோயாளிகள்,  60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக உள்ளனர்.

ஆந்திராவில் நேற்று (ஏப்ரல். 14 ) மட்டும் 19 புதிய பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட  நிலையில், ட்ரூநாட் (TrueNat) காசநோய் சோதனை உபகரணங்களைப் பயன்படுத்தி, ஒரு நாளைக்கு 4,000 பேருக்கு கோவிட்-19 பரிசோதனை திறனை அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. தனிமைப்படுத்தல் மையங்களில் அனுமதிக்கப்பட்ட மக்கள், வீடு திரும்பும்  ஏழைக் குடும்பங்களுக்கு, ரூ .2,000 நிதி உதவி வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட 25 குழந்தைகள், தெலுங்கானா தலைநகரில் அமைந்திருக்கும் காந்தி மருத்துவமனையில் குணமடைந்து  வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   " அனுமதிக்கப்பட்ட குழந்தைகளில் சிலர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், மற்றக் குழந்தைகள்  பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் "என்று மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் பி.ஸ்ரவன்குமார் தெரிவித்தார்.

குழந்தைகள் யாருக்கும், தீவிர சிகிச்சை தேவைப்படவில்லை. லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளன. சிகிச்சைக்கும் நன்கு பதிலளிக்கின்றனர், விரைவில் வீடு திரும்புவார்கள் என்று ஆந்திர / தெலுங்கானா அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment