ஆபத்தான இடங்களில் நின்று ‘செல்ஃபி’ புகைப்படம் எடுப்பது தற்போது இளைஞர்களிடையே பிரபலமாகி வருகிறது. தன் உயிரையும் பொருட்படுத்தாமல் உயரமான மலை உச்சிகள், கடல் பகுதிகள், வனப்பகுதி என ஆபத்து நிறைந்த பகுதிகளில் ‘செல்ஃபி’ புகைப்படங்கள் எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதவிடுவதை இளைஞர்கள் பெரிதும் விரும்புகின்றனர். ஆனால், இந்த ஆசையால் பலர் இறந்திருக்கின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் ஜூனைத். தன் நண்பர்களுடன் துப்பாக்கியை வைத்திருப்பதுபோல் ‘செல்ஃபி’ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்ற எண்ணினான். அதேபோல், துப்பாக்கியுடன் ‘செல்ஃபி’ எடுக்கும் சமயத்தில் அவன் தெரியாத்தனமாக துப்பாக்கி குழலை அழுத்திவிட்டான்.
இதையடுத்து, அச்சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். சிறுவனின் நண்பன் கேல் என்பவன் தான் துப்பாக்கியை தந்ததாக காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.
அச்சிறுவனுக்கு துப்பாக்கி எங்கிருந்து எப்படி வந்தது எனவும், அதை அச்சிறுவன் ஏன் ஜூனைத்திடம் கொண்டு வந்தான் எனவும் காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
செல்ஃபிக்காக 8 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படியுங்கள்: பாகுபலி ஸ்டைலில் நீர்வீழ்ச்சியிலிருந்து குதித்து உயிரைவிட்ட தொழிலதிபர்