புதுச்சேரி தனியா நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு துறை மேலாளராக பணிபுரிந்துவருபவர் ரஞ்சனி. இவருக்கு, கடந்த 10 நாள்களுக்கு முன்பு வாட்ஸ்அப்பில் தொடர்பு கொண்ட மர்மநபர் ஆன்லைனில் சம்பாதிக்க உங்களுக்கு விருப்பமா என்று கேட்டிருக்கிறார்.
எங்களிடம் முதலீடு செய்தால் நிறைய லாபங்களை உங்களுக்கு கொடுக்கிறோம் என்று சொன்னதை நம்பிய ரஞ்சனி அவர்கள் சொன்ன அனைத்து விஷயங்களையும் டெலகிராம் மற்றும் வாட்ஸ்அப் மூலமாக செய்திருக்கிறார்.
முதன்முறையாக அவர்கள் கொடுத்த டாஸ்கை முடித்த பொழுது ஒவ்வொன்றுக்கும் 150 ரூபாய் பணத்தை ரஞ்சனி வங்கிக் கணக்கிற்கு அனுப்பி இருக்கின்றனர்.
மேலும் 10 ஆயிரம் ரூபாய் அனுப்பும்போது 1500 ரூபாய் சேர்த்து 11,500 ரூபாயாக மோசடிக்காரர்கள் அனுப்பியதை நம்பி அதிக முதலீடு செய்தால் உங்களுக்கு நிறைய பணம் வருமானமாக கிடைக்கும் என நினைத்து தான் சேமித்து வைத்திருந்த ரூ.5 லட்சத்து 800ஐ அனுப்பி உள்ளார்.
தொடர்ந்து பணத்துடன் அவர்கள் மாயமாகிவிட்டார். இது குறித்து ரஞ்சனி அளித்த புகாரின் அடிப்படையில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
செய்தியாளர் பாபு ராஜேந்திரன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“