Advertisment

Aadhaar verdict: ஆதார் கட்டாயம் தேவை, ஆனால்..? உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஹைலைட்ஸ்

Aadhaar verdict: பான் கார்ட் வாங்குவதற்கு கட்டாயமாகிறது ஆதார் ஆனால் வங்கிகளில் கணக்கு தொடங்குவதற்கு ஆதார் கட்டாயம் இல்லை.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Supreme court hears Ayodhya verdict review petition today

Aadhaar supreme court verdict: ஆதார் எண் கட்டாயமா? என்கிற வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய வழக்கு இது! ஆதார் எண் கட்டாயம் என தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு அதிரடியாக உத்தரவிட்டது.

Advertisment

ஆதார் எண், அரசு சேவைகளுக்கு கட்டாய தேவையாக இருக்கிறது. குறிப்பாக வங்கிச் சேவை, பான் கார்டு, செல்போன் சேவை, பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்டவற்றை பெறுவதற்கு மத்திய அரசு ஆதாரை கட்டாயமாக்கியுள்ளது.

இதனை எதிர்த்து 27 பேர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். பயோமெட்ரிக் தகவல்கள், கைரேகை, கண் விழித்திரை தகவல்கள் உள்ளிட்டவை அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கு கட்டாயம் அல்ல என்றும் இதன் மூலம் தகவல் திருடப்படுவதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் மனுதாரர்கள் தெரிவித்திருந்தனர்.

அனைத்து மனுக்களையும் ஒன்றாக விசாரித்த சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு இன்று (செப்டம்பர் 26) தீர்ப்பு வழங்க உள்ளது. இதன் லைவ் இங்கே:

Aadhaar Supreme Court Verdict: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு Aadhaar Supreme Court Verdict: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு

Aadhaar verdict: ஆதார் உச்ச நீதிமன்ற தீர்ப்பு:

3:00 PM  : ஆதார் தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது என குறிப்பிட்ட மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, இந்தத் தீர்ப்பை வரவேற்பதாகவும் குறிப்பிட்டார்.

2:35 PM: ஆதார் சட்டம், நிதி மசோதாவாக தாக்கல் செய்ய வேண்டுமா? என்பது குறித்து விளக்கம் கேட்க உச்ச நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் அடங்கிய அமர்வை அணுகுவோம் என காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் கூறினார்.

2:20 PM: காங்கிரஸ் செய்தி தொடர்பாளரும், மனுதாரர் தரப்பு வழக்கறிஞருமான அபிஷேக் மனு சிங்வி கூறுகையில், ‘இந்த உத்தரவு முக்கியமானது. பாஜக.வுக்கு இது பின்னடைவு’ என்றார். அதேசமயம் பாஜக செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ராவும், ‘இது நல்ல தீர்ப்பு’ என குறிப்பிட்டார்.

2.00 PM:  நிதி மசோதாவாக ஆதார் சட்டத்தினை கொண்டு வரவேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்றைய தீர்ப்பில் கூறியிருந்தது. அது குறித்து விரிவான தீர்ப்பினை தரக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படும் - கபில் சிபில்

1. 45 PM: எதற்கெல்லாம் ஆதார் தேவையில்லை 

  • வங்கிக் கணக்குகள் துவங்க
  • சிம்கார்டுகள் வாங்க
  • தனியார் நிறுவனங்கள்
  • பள்ளி அட்மிஷன்களுக்கு
  • நீட், யூஜிசி, சிபிஎஸ்சி தேர்வுகளுக்கு இனிமேல் ஆதார் எண்ணை தரவேண்டிய அவசியம் இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது

மேலும் படிக்க : இனிமேல் இவை எதற்கும் ஆதார் எண் தேவையில்லை

1. 30 PM : அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் இந்த தீர்ப்பின் மூலம் மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாக பத்திரிக்கையாளர்களிடம் கூறியிருக்கிறார்.

12.45 PM: ஐவர் அடங்கிய அமர்வில் நான்கு பேர் ஆதார் சட்டத்திற்கு ஆதாரவாக தீர்ப்பு வெளியிட்டனர். ஆனால் ஒய். சந்திரசூட் ஆதார் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

12. 30 PM: தொலைத் தொடர்பு நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் கொடுத்திருந்த அனைத்து ஆதார் தகவல்களையும் நீக்கக் கூறி நீதிபதி சந்திரசூட் கூறியிருக்கிறார்.

12.00 PM: பள்ளி கல்லூரிகளில் சேரவும் சிம் கார்ட் வாங்கவும் ஆதார் கட்டாயம் இல்லை. வங்கிக் கணக்குகள் தொடங்வும் கட்டாயம் இல்லை. ஆனால் பான் கார்ட் வாங்குவதற்கு கட்டாயமாகிறது ஆதார்.

11:45 AM: தனியார் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆதாரை கட்டாயமாக கேட்கக்கூடாது, ஆதார் இல்லை என்பதை குறிப்பிட்டு ஏழைக் குழந்தைகளுக்கு கல்வி உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மறுக்கக்கூடாது என தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

11:30 AM: ஆதார் மூலமாக தனிநபர் கண்ணியம் காக்கப்படும் என்றும் நீதிபதி சிக்ரி வாசித்த தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது.

11:15 AM: அரசின் நலத்திட்டங்களை பெற ஆதார் கட்டாயம் என 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு உத்தரவு பிறப்பித்தது. இதன் மூலமாக ஆதார் எண் தேவையா? என்கிற விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருக்கிறது.

11:08 AM: சிறப்பாக இருப்பதைவிட தனித்துவமாக இருப்பது நல்லது. அரசின் திட்டங்களில் போலிகளை ஒழிக்க ஆதார் உதவுகிறது என நீதிபதி சிக்ரி கூறினார்.

11:05 AM : ஆதார் வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பை வாசித்து வருகின்றன. ஆதார் தனித்துவமானது. அதை போலியாக உருவாக்க முடியாது என நீதிபதி சிக்ரி கருத்து கூறியிருக்கிறார். நீதிபதி சிக்ரி வாசிப்பது, மெஜாரிட்டி நீதிபதிகளின் தீர்ப்பு!

11:00 AM: தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷன் ஆகிய 5 பேர் அடங்கிய பெஞ்ச் எந்த நேரமும் தீர்ப்பை வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

10:30 AM: ஆதார் எண் அரசு சேவைகளுக்கு கட்டயமா? என்கிற வழக்க்கில் தீபக் மிஸ்ரா அமர்வு தீர்ப்பு வழங்க இருக்கிறது.

 

Supreme Court Aadhaar Card
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment