ஆருஷி கொலை வழக்கில், போதிய ஆதாரம் இல்லாத காரணத்தினால் அவரது பெற்றோரை விடுதலை செய்து அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த நிலையில், அலகாபாத் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நகலை முழுமையாக ஆராய்ந்து, அதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த டாக்டர் தம்பதியினர் ராஜேஷ் தல்வார் மற்றும் நுபுர். அவர்களதது, 14- வயது மகள் ஆருஷி, கடந்த 2008-ஆம் ஆண்டு வீட்டில் உள்ள தனது அறையில் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். அந்த வீட்டின் வேலைக்காரர் ஹேமராஜ்(45) தான் இக்கொலையை செய்திருக்கக் கூடும் என போலீசார் சந்தேகித்தனர்.
ஆனால், திடீர் திருப்பமாக மறுதினமே வீட்டின் மொட்டை மாடியில் ஹேமராஜ் உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர்களிடையே முறையற்ற உறவு இருப்பதாக சந்தேகித்து ஆருஷியின் பெற்றோர் ராஜேஷ் தல்வர், நுபுர் தல்வார் ஆகியோர் கூட்டாக சேர்ந்து இருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
அப்போது, அம்மாநில முதலமைச்சராக இருந்த மாயாவதி இந்த வழக்கை, சிபிஐ-க்கு மாற்றினார். சிபிஐ விசாரணையில், ஆருஷியின் பெற்றோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. அதன்பின், 2010-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், சிபிஐ சமர்பித்த அறிக்கையில், "மற்ற வேலைக்காரர்களுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இல்லை. அதற்கு போதிய ஆதாரங்களை சேகரிக்க முடியவில்லை. ஆனால், ஆருஷி தந்தை ராஜேஷ் தான் முக்கியமான குற்றவாளி" என்று தெரிவித்தது
நாட்டையே உலுக்கிய இந்த இரட்டை கொலை வழக்கினை சி.பி.ஐ. விசாரணை செய்து வந்தது. இதில் கொலையை திட்டமிட்டு செய்ததாக ஆருஷியின் தந்தையான பல் டாக்டர் ராஜேஷ் தல்வார், தாயார் நுபுர் தல்வார் ஆகியோருக்கு சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் 2013-ம் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. இருவரும் காசியாபாத் நகரில் உள்ள தஸானா சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிபிஐ நீதிமன்றம் வழங்கிய தண்டனையை எதிர்த்து ராஜேஷ் தல்வார், நுபுர் தரப்பில் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. நாட்டையே உலுக்கிய இந்த இரட்டை கொலை சம்பவத்தில், அவரது பெற்றோர் ராஜேஷ் தல்வார், தாயார் நுபுர் ஆகியோரை விடுதலை செய்து அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார் ஆகியோர் தான் இந்த கொலையை செய்தது என்பதற்கான நேரடியான ஆதாரங்களை சி.பி.ஐ வழங்கவில்லை. இந்த கொலைச் சம்பவத்தை பார்த்ததர்கான சாட்சிகளும் இல்லை. இந்த கொலை செய்யப்பட்டதற்கான காரணம் என்பதனை கண்டறிய சி.பி.ஐ தவறவிட்டுவிட்டது என்ற காரணங்களை நீதிமன்றம் முன்வைத்து அவர்களை விடுதலை செய்தது.
இந்த நிலையில், வழக்கு தொடர்கான அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் நகல் கிடைத்தததும். அது குறித்து ஆராய்த பின்னர், அடுத்த கட்ட நடிவடிக்கை எடுக்கப்படும் என சி.பி.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆருஷி கொலை வழக்கு: இந்த கேள்விகளுக்கு யார் இனி விடை அளிப்பார்கள்?
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.