கேரளாவில் நடுங்க வைக்கும் மர்மம்: சுற்றுலா சென்ற தமிழர்கள் நியூசிலாந்து கடத்தப்பட்டார்களா?

டெல்லி போலீசின் உதவியை நாடியுள்ள கேரள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

எழுதியவர்: Arun Janardhanan

கேரளாவுக்கு சுற்றுலா சென்ற தமிழர்கள் கொச்சி துறைமுகத்தில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காணமால் போன 230 பேர் கடத்தப்பட்டார்களா? அல்லது சட்ட விரோதமாக நியூசிலாந்து தப்பி சென்றார்களா? என போலீஸார் திவீர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 11 ஆம் தேதி கேரள போலீசார் திருச்சூரில் உள்ள கொடுங்கல்லூர் கோயில் அருகில் 50 பைகளை கைப்பற்றினர். அந்த பைகளை ஆராய்ந்த போது அதில் ஐடி கார்டுகள், துணிகள் மேலும் பல பொருட்கள் இருந்தனர். இதனைப்பார்த்த போலீசார் கேரளா சபரிமலைக்கு வந்த பக்தர்கள் தவறுதலாக பைகளை விட்டுச் சென்று இருக்கலாம் என யோகித்தனர்.

அடுத்த 2 நாட்களில் திருச்சூரில் உள்ள முனம்பம் துறைமுகம் உட்பட பல பகுதிகளில் இருந்து சுமார் 230 பைகள் கைப்பற்றப்பட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் அதுக் குறித்து தீவிர விசாரணையில் ஈடுப்பட்டனர். இதில் திடுக்கிடும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் இருந்து சுமார் 230 பேர் கேரளாவுக்கு சுற்றுலா வந்துள்ளனர். இதில் 50 க்கும் மேற்பட்டவர்கள் தமிழை பூர்விகமாகக் கொண்டவர்கள் எனவும் கூறப்படுகிறது. இதில் கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடக்கம்.

இவர்கள் அனைவரும் குமரி மாவட்ட விசைப்படகில் இருந்து சட்ட விரோதமாக நியூசிலாந்துக்கு தப்பி சென்று விட்டதாக சந்தேகிப்பட்டது.இதனையடுத்து போலீசார் முனம்பம் அருகே உள்ள மாலியங்கரையில் உள்ள படகு குழாம் பகுதி உட்பட பல இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுப்பட்டனர். திருச்சூரில் கிடைத்த பைகள் அனைத்தும் அவர்கள் விட்டு சென்ற பைகள் தான் எனவும் உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை கேரள போலீசார் 29 வயதாகும் பின்பு என்ற இளைஞரை கைது செய்தனர். இவர், சட்டவிரோத ஆள் கடத்தல் கும்பலுக்கு உதவி செய்பவர் என்ற விவரமும் தெரிய வந்தது. டெல்லி அம்பேத்கர் நகரை சேர்ந்த பிரபு மற்றும் படகு உரிமையாளர்கள், ஸ்ரீகாந்த், ரவீந்தரா, சாந்த குமார் ஆகியோரையும் போலீசார் கைது செய்து விசாரணையில் ஈடுப்பட்டனர்.

பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையை விரிவுப்படுத்தினர். கைது செய்யப்பட்டவர்களிடன் நடத்தப்பட்ட விசாரணையில் சுற்றுலா வந்தவர்கள் தங்களது விருப்படி நியூசிலாந்துக்கு சட்டவிரோதமாக தப்பி சென்றதாகவும், இதற்காக தான் அவர்கள் பல்வேறு பகுதியில் இருந்து வந்ததாகவும், இதற்கு அவர்கள் ஏஜென்டிடம் 1.2 லட்சம் முதல் 3 லட்சம் வரை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இந்த பயணத்திற்காகவே, சிலர் டெல்லியில் இருந்து சென்னை வழியாக ரயிலிலும், 3 பேர் விமானத்திலும் கொச்சி வந்துள்ளனர். அவர்கள் படகு மூலம் நியூசிலாந்து தப்பிச் சென்றுள்ளனர். போலீசார் வருவதை முன்கூட்டியே தெரிந்து கொண்ட அவர்கள் அவசரமாக கிளம்பியுள்ளனர். இதில், அவர்களின் உடமைகள் சிலவற்றை விட்டுச் சென்றதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.

இவர்கள் அனைவரும் தேவமாதா படகில் நியூசிலாந்து தப்பி சென்றதாக சொல்லப்படுகிறது.இந்த படகு குமரி மாவட்டம் குளச்சலை சேர்ந்தவருக்கு சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.புறப்படுவதற்கு முன் முனம்பத்தில் உள்ள பெட்ரோல் பம்பில் இருந்து 12 ஆயிரம் லிட்டர் டீசலும் வாங்கியுள்ளனர். இந்த கும்பலில் இருந்தவர்கள், இந்தி, ஆங்கிலம், தமிழில் பேசி உள்ளனர். ஆஸ்திேரலியாவில் அனுமதி இல்லாமல் செல்பவர்களுக்கு பெரும்பாலும் தண்டனை கிடைப்பதில்லை. இதனால்தான், ஏராளமாேனார் இங்கிருந்து அனுமதியில்லாமல் செல்வதாக கூறப்படுகிறது.

ஆனால் அதே நேரம், இந்த சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட கடத்தல் என்ற தகவலும் ஒருபக்கம் இணையத்தில் கசிந்துக் கொண்டிருக்கிறது. ஆள் கடத்தல் கும்பல் ஒன்று சுற்றுலா சென்றிருந்தவர்களை சட்டவிரோதமாக கடத்தி ஆஸ்திரேலியா அழைத்து சென்றதாக ஒருபக்கம் பகீர் தகவல்களும் பரவி கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இதுக் குறித்து டெல்லி போலீசின் உதவியை நாடியுள்ள கேரள போலீசார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டுள்ளனர்.

விசாரணைக்கு பின்பு உறுதியான தகவல் வெளிவரும் என்று நம்பப்படுகிறது. கேரளாவில் தமிழர்கள் மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close