யோகி வருவார் பின்னே... சோபா, ஏ.சி வரும் முன்னே... உ.பி விசித்திரம்

முதலமைச்சர் அந்த குடும்பத்தை சந்தித்து விட்டு திருப்பிய அரை மணி நேரத்திற்குள்ளாக, அங்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் அகற்றிவிட்டது.

கடந்த மே 1-ம் தேதி இந்திய எல்லைக் கோட்டுப் பகுதியில் பாகிஸ்தான் ரணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலின் போது இரண்டு இந்திய ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இந்த தாக்குதலின் போது உயிரிழந்த பிரேம் சாகர்(45) என்ற வீரர், உத்திரபிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள திகம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.

இந்நிலையில், கடந்த 12-ம் தேதி உத்திரபிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்த வீரர் சாகரின் வீட்டிற்கு சென்று அவரது குடும்பத்தை சந்தித்தார். இதற்காக சாகர் வீட்டில் ஏ.சி, ஷோபா போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. ஆனால், முதலமைச்சர் அந்த குடும்பத்தை சந்தித்து விட்டு திருப்பிய அரை மணி நேரத்திற்குள்ளாக, அங்கு செய்து கொடுக்கப்பட்ட வசதிகளை மாவட்ட நிர்வாகம் அகற்றிவிட்டது.

இது தொடர்பாக சாகரின் மகன் ஈஸ்வர் சந்த்திரன் கூறியதாவது: கடந்த வெள்ளிக்கிழமை எங்கள் வீட்டுக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வந்திருந்தார். அவர் வருவதற்கு முன்பாக அதாவது வெள்ளிக்கிழமை மதியம் சுமார் 1.00 மணியளவில் எங்கள் வீட்டில் ஏசி, ஷோபா வசதிகள் அமைக்கப்பட்டன. மேலும், அந்த அறை முழுவதும் கம்பளம் விரிக்கப்பட்டன. இதன் பின்னர் வீட்டிற்கு வந்த தந்த முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், எங்கள் வீட்டில் சுமார் அரை மணி நேரம் இருந்துவிட்டு சென்றார். அவர், சென்ற சிறிது நேரத்தில் எங்கள் வீட்டில் அமைக்கப்பட்ட ஏசி, ஷோபா மற்றும் கம்பளங்கள் உடனடியாக அகற்றப்பட்டது’’ என்றார்.

இந்த சந்திப்பின் போது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சாகரின் குடும்பத்திற்கு ரூ.4 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். மேலும், ரூ.2 லட்சம் ஃபிக்ஸுட் டெபாசிட்-கான சான்றிதழையும் வழங்கினார்.

சாகர் வீட்டில் இருந்து ஏசி உள்ளிட்ட வசதிகள் அகற்றப்பட்டது குறித்த தகவலை பெறுவதற்கா, அரசு அதிகாரிகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்டது. அப்போது, அந்த மாவட்டத்தின் மாஜிஸ்திரெட் சுஜித் குமரை பலமுறை தொடர்பு கொண்ட போதும், அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. இதையடுத்து, சப்-டிவிஷனல் மாஜிஸ்திரெடான பபார் ராணி தெஹில் என்பரிவடம் கேட்டபோது, முதலமைச்சர் வருகையையொட்டி ஏசி உள்ளிட்ட வசதிகளை அமைத்தது பொதுப்பணித்துறை அதிகாரிகள் வீரேந்திர குமார் டோஹ்ரி மற்றும் ராஜேஷ் குமார் தியாகி என பதிலளித்தார்.

ஆனால், ராஜேஷ் குமார் தியாகியை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, அவரது அலுவலக நம்பரின் மூலமாக அவரை கொள்ள முடியவில்லை. மற்றொரு அதிகாரியான வீரேந்திர குமார் டோஹ்ரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது கூறியதாவது: ஓரு விஐபி வருகிறார் என்றால் அதற்கு ஏற்ற வசதிககளை செய்து கொடுப்பது வழக்கமான நிகழ்வு தான். அதை நாங்கள் தான் செய்து கொடுக்க வேண்டும். முதலமைச்சர் வருகை தந்த நாளன்று எனக்கு மற்றொரு வேலை இருந்ததால், அங்கு செல்ல இயலவில்லை. ஆனால், சாகரின் வீட்டில் அமைக்கப்பட்ட ஏசி, ஷோபா போன்ற வசதிகள் எப்போது அகற்றப்பட்டன என்பது குறித்த தகவல் என்னிடம் இல்லை என்று கூறினார்.

இந்நிலையில், முதலமைச்சரின் வருகையை அடுத்து அம்மாநில அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதில், வீரமரணம் அடைந்த தியாகியின் நினைவாக அந்த கிராமத்தில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும். அங்கு 1.5 ஏக்கர் பரப்பளவில் பெண்களுக்காக பள்ளி அமைக்கப்படும். அந்த கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைத்தல், பூங்கா அமைத்தல் போன்ற வசதிகள் செய்து கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சாகரின் குடும்பத்தினர் தங்களுக்கு சமையல் கியாஸ் ஏஜென்ஸி அமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை செய்வதாக யோகி ஆதித்யநாத் உறுதியளித்துள்ளார்.

×Close
×Close