44 நாட்கள், 31 வெளி மாநில தொழிலாளர்கள் : பண்ணை வீட்டில் பாதுகாத்த பிரகாஷ் ராஜ்

அவர்களின் கதைகளிலிருந்து ஏராளமானவற்றை நான் கேட்டு அறிந்தேன். நான் அவர்களைக் கைவிட்டு விடவில்லை என்பதை நினைத்து ஒரு சக குடிமகனாகப் பெருமை கொள்கிறேன்.

Actor Prakash Raj helps migrant workers
Actor Prakash Raj helps migrant workers

Actor Prakash Raj helps migrant workers : கொரோனா வைரஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவுன், பல்வேறு மாநிலங்களில் கூலித் தொழிலாளிகளாக பணியாற்றும் வெளிமாநில மக்கள் மிகவும் திண்டாட துவங்கினர்.  இந்நிலையில் கர்நாடகாவில் பணியாற்றி வந்த 31 தெலுங்கானாவை சேர்ந்த தொழிலாளிகள் செய்வதறியாது திகைத்து நின்றனர். அவர்களுக்கு உதவும் வகையில் நடிகர் பிரகாஷ் ராஜ் தன்னுடைய பண்ணை வீட்டில் தங்குவதற்கு அனுமதி கொடுத்தார்.

மேலும் அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துள்ளார். ஊரடங்கில் சில முக்கியமான தளர்வுகளை கடந்த வாரம் அறிவித்தது மத்திய அரசு. வெளிமாநிலங்களில் தங்கியிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்ப போக்குவரத்து வசதி ஏற்படுத்தி தரப்பட்டது.

நேற்ற் பிரகாஷ்ராஜின் பண்ணை வீட்டில் தங்கியிருந்த புலம்பெயர் தொழிலாளர்களை அழைத்து செல்ல தெலுங்கானா அரசு சார்பில் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் பத்திரமாக தங்களின் சொந்த மாநிலத்திற்கு புறப்பட்டு சென்றனர்.

இது தொடர்பாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்திருக்கும் பிரகாஷ் ராஜ், தெலுங்கானா அரசிற்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். மேலும் 44 நாட்கள் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்தது குறித்தும், இனி அவர்களை மிஸ் செய்யப் போவதாகவும் குறிப்பிட்டிருந்தார். அவர்களின் கதைகளிலிருந்து ஏராளமானவற்றை நான் கேட்டு அறிந்தேன். நான் அவர்களைக் கைவிட்டு விடவில்லை என்பதை நினைத்து ஒரு சக குடிமகனாகப் பெருமை கொள்கிறேன் எனவும் ட்வீட் பதிவுட்டள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Actor prakash raj helps migrant workers

Next Story
மூடிய பொது இடங்களே வைரஸ் பரவலுக்கான அருமையான சூழல் – எச்சரிக்கும் ஆய்வுClosed public spaces are environments for covid 19 super-spreading
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com