கடந்த ஜனவரி மாதம் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி குழுமம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்கு மோசடி உட்பட பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாக ஹிண்டன்பர்க் குற்றம்சாட்டியது.
இதில் விசாரணையின் கீழ் உள்ள 13 வெளிநாட்டு நிதிகளில் ஒன்றான ஓபல் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் கட்டுப்பாட்டுப் பங்குதாரர் மற்றும் அதானி பவர் லிமிடெட்டின் மிகப்பெரிய பொது முதலீட்டாளர், மே 2019 இல் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நிறுவப்பட்ட "தனி நபர் நிறுவனம்" என்பதை தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அணுகிய கார்ப்பரேட் பதிவுகள் காட்டுகின்றன.
அதானி-ஹிண்டன்பர்க் குறித்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையின்படி, செபி தனது விசாரணையில், பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 இன் கீழ், ஒரு ஜெனித் கமாடிடீஸ் ஜெனரல் டிரேடிங் எல்.எல்.சி.யை ஓபல் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட்டின் கட்டுப்பாட்டுப் பங்குதாரராகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸைச் சேர்ந்த அடெல் ஹசன் அகமது அலலியை அதன் ஆதாய உரிமையாளராகவும் அடையாளம் கண்டுள்ளது.
ஜூலை 2020 இல், அடெல், ஓபல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் (மொரிஷியஸ்) இயக்குநராகவும் ஆனார் மற்றும் கார்ப்பரேட் சேவை வழங்குநரான Trustlink International முகவரியுடன் பதிவு செய்தார்.
துபாயில் உள்ள ஒரு நபர் அமைப்பு, தற்போதைய சந்தை மதிப்பில் ரூ. 8,000 கோடிக்கு மேல் மதிப்புள்ள ஓபல் இன்வெஸ்ட்மென்ட்டின், ஏபிஎல் பங்குகளை வைத்திருக்கிறது மற்றும் கட்டுப்படுத்துகிறது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அணுகிய கார்ப்பரேட் பதிவுகள், ஓபல் இன்வெஸ்ட்மென்ட் அதன் கார்ப்பரேட் ஏஜென்ட் டிரஸ்ட்லிங்க் இன்டர்நேஷனலை கைவிட்டு, மொரிஷியஸ் நிதி, அதானி குழுமத்துடன் இணைக்கப்பட்ட பிறகு ஒரு இணையதளத்தை உருவாக்கியது என்பதைக் காட்டுகிறது.
இந்த ஜனவரியில் அதானி அறிக்கையில், ஹிண்டன்பர்க் ஆய்வு- ஓபல் இன்வெஸ்ட்மென்டிற்கு இணையதளம் இல்லை, லிங்க்ட்இனில் பணியாளர்கள் இல்லை மற்றும் எந்தவொரு முதலீட்டு மாநாடுகளிலும் அதன் மார்க்கெட்டிங் பொருட்கள் அல்லது பதிவுகள் இல்லை.
அதானி குழுமம், ஓபல் இன்வெஸ்ட்மென்ட்டை, அதானி போர்ட்ஃபோலியோவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களில் பொது பங்குதாரர்களில் ஒருவராக விவரித்தது. அவர்கள் எந்த வகையிலும் விளம்பரதாரர்களின், கட்சிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற மறைமுகமான கருத்துக்கள் தவறானவை, என்று கூறியது
இந்திய சட்டங்களின் கீழ், பட்டியலிடப்பட்ட நிறுவனத்திற்கு பொதுவில் வர்த்தகம் செய்யப்படும் பங்குகளை யார் வாங்குவது/விற்பது/சொந்தமாக வைத்திருப்பது அல்லது எவ்வளவு அளவு வர்த்தகம் செய்யப்படுகிறது, அல்லது அத்தகைய பொது பங்குதாரர்களுக்கான நிதி ஆதாரம் அல்லது அத்தகைய தகவல்களை வைத்திருக்க வேண்டிய அவசியமில்லை.
எனவே வர்த்தக முறை அல்லது பொது பங்குதாரர்களின் நடத்தை குறித்து எங்களால் கருத்து தெரிவிக்க முடியாது, என்று அது கூறியது.
இதுதொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தொடர்பு கொண்ட போது, அதானி குழுமத்தின் செய்தித் தொடர்பாளர் ஒரு மின்னஞ்சலில், ’குறிப்பிடப்பட்ட சுயாதீன தனிப்பட்ட பங்குதாரர்களை (independent individual shareholders) தொடர்பு கொள்ளவும், ஏனெனில் அவர்கள் தொடர்பான விஷயங்களில் நீங்கள் தேடும் விவரங்கள் எங்கள் வரம்புக்கு அப்பாற்பட்டவை’ என்றது..
Opal Investment உரிமையாளரான Adel க்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல்கள் குறித்து எந்த பதிலும் இல்லை.
2011 ஆம் ஆண்டில் அதன் துணை நிறுவனமான க்ரோமோர் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் பிரைவேட் லிமிடெட், ஏபிஎல் உடன் இணைந்ததைத் தொடர்ந்து ஓபல் இன்வெஸ்ட்மென்ட் APL -ல் 8.91 சதவீத பங்குகளை வைத்திருந்தது (இறுதியில் 2012 இல் குஜராத் உயர் நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது).
ஏபிஎல் பங்கு மூலதனத்தின் அதிகரித்த வளர்ச்சியின் காரணமாக, மார்ச் 31, 2023 அன்று, ஓபல் இன்வெஸ்ட்மென்ட்டின் பங்கு 4.69 சதவீதமாக இருந்தது (still its largest public holding)
2010 இல் மொரிஷியஸில் இணைக்கப்பட்ட, க்ரோமோர் டிரேட் அண்ட் இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம், மகாராஷ்டிராவின் கோண்டியாவில் உள்ள டிரோடா மின் உற்பத்தி நிலையத்தை வைத்திருக்கும் APL இன் துணை நிறுவனமான அதானி பவர் மகாராஷ்டிரா லிமிடெட் (APML) இல் 26 சதவீத பங்குகளை ரூ. 567 கோடிக்கு (அப்போது 128 மில்லியன் டாலர்) ஒதுக்கியது. ஒரு பங்கின் மதிப்பு 10 ரூபாய்.
இருப்பினும், Tiroda திட்டத்தின் பின்னணியில், APML’s ஹோல்டிங் நிறுவனமான APL ஏற்கனவே 2009 ஆம் ஆண்டில் IPO மூலம் ரூ. 100 அல்லது முக மதிப்பை விட பத்து மடங்கு பங்குகளை வெளியிட்டு ரூ.3,000 கோடியை திரட்டியது.
ஏபிஎல் மற்றும் க்ரோமோர் இணைந்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 2011 இல், ஏபிஎல்-ல் ஓபல் இன்வெஸ்ட்மென்ட்டின் 8.91 சதவீதப் பங்குகள் தோராயமாக ரூ. 2,500 கோடியாக (அப்போது 550 மில்லியன் டாலர்கள்) மதிப்பிடப்பட்டது.
APL தனிப்பட்ட பங்குதாரர்கள், இந்த இணைப்பை எதிர்த்து ஏப்ரல் 2012 இல் குஜராத் உயர் நீதிமன்றத்தை அணுகினர். க்ரோமோர் வரிச் சலுகை அடிப்படையாகக் கொண்டது, அதற்கு சொத்துக்கள் எதுவும் இல்லை என்ற அடிப்படையில் ED மற்றும் DRI போன்ற புலனாய்வு அமைப்புகளின் கருத்துக்களை நீதிமன்றம் கோரியது.
செப்டம்பர் 2012 இல், ஒரு தனி நீதிபதியின் அந்த உத்தரவை ஒரு டிவிஷன் பெஞ்ச் நிராகரித்து, ஒருங்கிணைக்கும் திட்டத்தை அனுமதித்தது.
Read in English: Owner of Adani Power’s Mauritius investor a ‘single person company’
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.