’பாங்’ அருந்திவிட்டு மாணவிகள் விடுதிக்குள் அரை நிர்வாணத்தில் நுழைந்த எய்ம்ஸ் மாணவர்

மது அருந்திவிட்டு, போதையில் அரை நிர்வாணத்தில் மாணவியர் விடுதியில் நுழைந்த இறுதியாண்டு மருத்துவ மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள எய்ம்ஸ் கல்லூரியில், ஹோலி கொண்டாட்டத்தில் மது அருந்திவிட்டு, போதையில் அரை நிர்வாணத்தில் மாணவியர் விடுதியில் நுழைந்த இறுதியாண்டு மருத்துவ மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஹோலி பண்டிகையை முன்னிட்டு கடந்த 27-ஆம் தேதி அந்த மாணவர் தன் நண்பர்களுடன், போதையை உண்டாக்கக்கூடிய ‘பாங்’ எனப்படும் பானத்தை அருந்தியிருக்கிறார். இதையடுத்து, போதையில் அவர் மாணவியர் விடுதியில் நுழைந்த நிலையில், அவரது கீழாடை அவிழ்ந்திருக்கிறது. இதனால், அங்கிருந்த மாணவிகள் பெரும் சங்கடத்திற்கு ஆளாகினர்.

இதையடுத்து, அந்த மாணவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மாணவிகள் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, அம்மாணவர் 3 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து அந்த மாணவரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மாணவர் ஒருவர் துணையுடன் அவர் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அந்த மாணவர் கேரளாவை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து, எய்ம்ஸ் கல்லூரி பெண்கள் விடுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என நிர்வாகம் தெரிவித்தது.

×Close
×Close