Advertisment

கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அமித் ஷா; திமுக குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்திய அழைப்பு

தமிழக முதல்வரும், கனிமொழியின் அண்ணனுமான முக ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூத்த திமுக தலைவர்கள் பலர், இது வெறும் மரியாதை நிமித்தமான அழைப்பாக இதனை பார்க்கவில்லை.

author-image
WebDesk
New Update
கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய அமித் ஷா; திமுக குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்திய அழைப்பு

Liz Mathew

Advertisment

Shahs birthday call to Kanimozhi: பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கும், திமுக மாநில அரசுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் அதிகரித்து வருகின்ற நிலையில், மத்திய உள்த்துறை அமைச்சர் அமித் ஷா, ஒரு மாதத்திற்கு முன்பு கனிமொழிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் கூறிய நிகழ்வு தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கும் மசோதா குறித்து விவாதம் செய்ய திமுக தலைவர்கள், அமித் ஷாவிற்கு காத்துக் கொண்டிருக்கும் நேரத்தில், அமித் ஷா, கனிமொழியின் 54வது பிறந்த தினத்திற்கு வாழ்த்துகள் தெரிவிக்க ஜனவரி 5ம் தேதி அலைபேசியில் அழைத்துள்ளார்.

இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி, தன்னுடைய பிறந்த நாள் அன்று அமித் ஷா தனக்கு அழைத்ததை ஒப்புக் கொண்டார்.

இதை ஒரு சாதாரண அழைப்பாக, தமிழக முதல்வரும், கனிமொழியின் அண்ணனுமான முக ஸ்டாலின் ஏற்றுக் கொள்ளவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மூத்த திமுக தலைவர்கள் பலர், இது வெறும் மரியாதை நிமித்தமான அழைப்பாக இதனை பார்க்கவில்லை. மேலும் இந்த அழைப்பானது திமுக தலைவர்கள் நீட் விவகாரம் தொடர்பாக பேச காத்துக் கொண்டிருந்த போது அமித் ஷா தயக்கம் காட்டிய தருணத்தில் நிகழ்ந்தது என்பதால் இதன் பின்னர் அரசியல் அர்த்தங்கள் உள்ளது என்று கூறுகின்றனர்.

மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க மறுப்பது என்பது ஜனநாயத்திற்கு எதிரானது என்று இந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த நாள், ஜனவரி 6ம் தேதி, சட்டமன்றத்தில் முக ஸ்டாலின் கூறியது குறிப்பிடத்தக்கது.

திமுக எம்.பி டி.ஆர்.பாலு தலைமையிலான குழுவினர், நீட் தேர்வால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகள் குறித்து விளக்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் முதலில் மனு அளித்தனர். அதனை குடியரசுத் தலைவர் அலுவலகம் அமித் ஷா அலுவலகத்திற்கு அனுப்பியது. இந்த சந்திப்பிற்கு கூட்டத்திற்கு டி.ஆர்.பாலு ஏற்பாடு செய்தார் என்று உதகை மக்களவை தலைவர் ஆ. ராசா இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார். இந்த கூட்டம் ஜனவரி 17ம் தேதி நடைபெற்றது.

நீட் விலக்கு மசோதா தமிழக அரசுக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் இடையே ஒரு பெரிய வாதமாக மாறியுள்ளது. ஆனாலும் தமிழக அரசு ஒருமனதாக நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றியுள்ளது. ஆனால் அந்த மசோதாவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் ஒப்புதலுக்கு ரவி அனுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டாலின் தேசிய அளவில், எதிர்க்கட்சியினர் மத்தியில் ஒரு பிரதான நபராக எதிர்பார்க்கும் நேரத்தில் இத்தகைய சலசலப்பு அரங்கேறியுள்ளது. ஞாயிறு அன்று, மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கருடன் முரண்படும் மமதா பானர்ஜி, முக ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்ததாக கூறப்படுகிறது. மாநிலங்களில் சுயாட்சி குறைக்கப்பட்டு வருவது தொடர்பாக பாஜக எதிர்ப்பு எதிர்க்கட்சித் தலைவர்களின் மாநாடு விரைவில் டெல்லியில் நடைபெறும் என்றும் அவர் கூறியதாக தெரிய வந்துள்ளது.

ஐ.ஏ.எஸ். கேடர் விதிமுறைகளில் மத்திய அரசு கொண்டு வரும் மாற்றங்களுக்கு எதிராக குரல்களை எழுப்பியுள்ள மற்ற எதிர்க்கட்சிகளுடன் தன்னையும் இணைத்துக் கொண்டார் முக ஸ்டாலின். பிஜேபி அரசாங்கத்துடனான வேறுபாட்டை அடிக்கோடிட்டுக் காட்டும் மற்றொரு நடவடிக்கையாக, மத்திய அரசு என்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு என்பதை அதிகாரப்பூர்வ தொடர்புகளில் தமிழக அரசு பயன்படுத்து வருவது பார்க்கப்படுகிறது.

ஸ்டாலினைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் முயற்சியைத் தவிர்த்து, கனிமொழிக்கு ஷாவின் அழைப்பு, திமுகவின் பிரதான குடும்பத்தில் சலசலப்பை ஏற்படுத்தும் ஒன்றாக திமுகவினர் கருதுகின்றனர். கருணாநிதியின் மறைவிற்கு முன்பு, திமுகவின் தலைமை பதவிக்கான போட்டியாளர்களில் கனிமொழியும் ஒருவராக இருந்தார். ஆனால், தற்போது வாரிசுரிமை ஸ்டாலினுக்கு சாதகமாக அமைந்துள்ளது. மேலும், திமுகவின் அடுத்த தலைவராக ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினை தொடர்ந்து முன்னிலைப்படுத்துவது பழைய காயங்களை மீண்டும் கிளறும் ஒன்றாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் நின்று வெற்றி பெற்ற உதயநிதி விரைவில், முக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment