ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து : ஜெகன் மோகன் ரெட்டியின் கனவை தகர்த்த நிர்மலா சீதாராமன்

ஒரு மாநிலத்தின் தொழிற் வளர்ச்சியை மையப்படுத்தி சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்படுவதில்லை - நிதி அமைச்சர்

Andhra Pradesh Special Category Status : ஆந்திராவில் நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மாபெரும் வெற்றியை பெற்றது. தன்னுடைய தேர்தல் அறிக்கையிலேயே ஆந்திராவிற்கு சிறப்பு மாநில அந்தஸ்து வாங்கித்தரப்படும் என்று மேற்கொள்காட்டப்பட்டது.  ஆனால் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எம்.பி. கௌசலேந்திர குமார் எழுப்பிய கேள்விக்கு நிர்மலா சீதாராமன் அளித்த பதில் ஜெகன் மோகன் ரெட்டியின் கனவினை தகர்த்துவிட்டது என்று தான் கூற வேண்டும்.

பிகார் மற்றும் ஆந்திர பிரதேசத்தின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா என்ற கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தற்போது எந்த மாநிலத்திற்கும் சிறப்பு அந்தஸ்து அளிப்பதற்கான முடிவுகளை மத்திய அரசு எடுக்கவில்லை என்று கூறிவிட்டார்.

எதன் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் ?

தேசிய வளர்ச்சி கவுன்சில் சில மாநிலங்களை தேர்வு செய்து அம்மாநிலங்களுக்கு சில தகுதிகளின் அடிப்படையில் சிறப்பு அந்தஸ்து வழங்குவது வழக்கம். அப்படி சிறப்பு அந்தஸ்து பெரும் மாநிலங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு புதிய திட்டங்கள் அங்கு உருவாக்கப்படும். ஆனால் இந்த சிறப்பு அந்தஸ்த்தினை பெறுவதற்கு ஒரு மாநிலத்தின் நிலம் முதல் அனைத்தும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

மலை முகடுகள், கடினமான வாழ்வியல் சூழல்கள், குறைவான மக்கள் தொகை / மக்கள் அடர்த்தி, கணிசமான அளவில் இருக்கும் பழங்குடிகளைக் கொண்ட மாநிலங்கள், சர்வதேச எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் மாநிலங்கள், பொருளாதார / உள்கட்டமைப்பு வசதிகளில் பின்தங்கியிருக்கும் மாநிலங்கள் என்ற அடிப்படையில் தான் சிறப்பு அந்தஸ்தது ( Special Category Status (SCS)) வழங்கப்படும். தற்போதைக்கு அப்படியான அந்தஸ்து வழங்குவதற்கான முகாந்திரம் இல்லை என்று அறிவித்த மத்திய அமைச்சர் மேலும், தொழிற்சாலைகள் வளர்ச்சியை மையப்படுத்தி சிறப்பு அந்தஸ்துகள் வழங்கப்படுவதில்லை என்றும் கூறிவிட்டார்.

Andhra Pradesh Special Category Status -மறுத்துவிட்ட நிர்மலா சீதாராமன்

இது ஜெகன் மோகன் ரெட்டிக்கு மாபெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. 22 தொகுதி மக்கள் உங்களை தேர்வு செய்து, அவர்களுக்கு தேவையானதை நீங்கள் செய்வீர்கள் என்று நம்பி உங்களை நாடாளுமன்றம் அனுப்பியுள்ளனர். 22 மக்களவை உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் மத்திய அரசிற்கு அழுத்தம் தந்து, ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்த்தினை பெற்றுத் தரவேண்டும் என்று தன்னுடைய எம்.பிக்களுக்கு அறிவுரை வழங்கி நாடாளுமன்றம் அனுப்பியுள்ளார் ஜெகன் மோகன் ரெட்டி.

மேலும் படிக்க : மலரும் நினைவுகள் : இந்த 2 மத்திய அமைச்சர்களையும் வளர்த்தெடுத்த ஜே.என்.யூ

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close