scorecardresearch

வைர வியாபாரி மெஹூல் சோக்ஸி கடத்தப்பட்டாரா? விசாரணையை ஆரம்பித்த ஆண்டிகுவா அரசு

தன்னுடைய காதலியுடன் சட்டத்திற்கு புறம்பாக டொமினிக்காவுக்குள் நுழைந்ததால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

Antigua police has started investigating Mehul Choksi abduction

Antigua police has started investigating Mehul Choksi’s ‘abduction’ : வைர வியாபாரி மெஹூல் சோக்ஸியை டொமினிக்காவிற்கு யாரோ கடத்தி சென்றதாக அவருடைய வழக்கறிஞர்கள் புகார் அளித்ததை தொடர்ந்து ஆன்டிகுவா – பார்படா நாட்டின் காவல்த்துறையினர் அந்த வழக்கை விசாரணை செய்து வருவதாக அந்நாட்டின் பிரதமர் காஸ்டன் ப்ர்வுன் கூறியுள்ளார்.

கடத்தலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபர்களின் பெயர்களை போலீஸ் கமிஷனரிடம் புகாரில் சோக்ஸியின் வழக்கறிஞர்கள் கொடுத்ததாக பிரவுன் கூறியுள்ளார் என்று ஆன்டிகுவா நாட்டு செய்தி நிறுவனம் ஒன்று கூறியுள்ளது. இந்த புகார் உண்மையாக இருந்தால் இது கொஞ்சம் தீவிரமான விசயம் தான் என்று காஸ்டன் கூறியுள்ளார்.

சோக்ஸி ஆன்டிகுவாவில் இருந்து டொமினிகாவிற்கு கடத்தி செல்லப்பட்டதாக அவருடைய வழக்கறிஞர்கள் மூலம் ராயல் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். எனவே இந்த விவகாரம் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் கூறினார். அசோசியேட்ஸ் டைம்ஸின் மற்றொரு அறிக்கை டொமினிகா எதிர்க்கட்சித் தலைவர் லெனாக்ஸ் லிண்டனை தொடர்புபடுத்தியது. மே 23 அன்று இரவு 10 மணியளவில் சோக்ஸி டொமினிகாவிற்கு ஆர்னேவின் படகு காலியோப் மூலம் கொண்டுவரப்பட்டார் என்று அவர் கூறினார்.

சோக்ஸியின் குடும்பத்தினர், அவர் ஆன்டிகுவாவில் தான் மே 23 மாலை 5 மணி வரை இருந்ததாக கூறியுள்ளனர். 120 மைல் தூரத்தை நான்கு முதல் ஐந்து மணி நேரத்தில் கடக்க முடியாது. அதற்கு குறைந்தது 12 முதல் 13 மணி நேரமாவது ஆகும் என்றும் அந்த பத்திரிக்கை செய்தி குறிப்பிட்டிருந்தது. சுங்க ஆவணத்தின் படி, மே 23ம் தேதி அன்று காலை 10 மணிக்கு ஆன்டிகுவாவில் இருந்து அந்த படகு புறப்பட்டது. மேலும் சோக்ஸியின் வீட்டு வேலைக்காரர் சோக்ஸியை 5 மணிக்கு அவருடைய வீட்டில் பார்த்தாக கூறினார். எனவே லிண்டன் கூறியது போன்று அவர் படகில் பயணிக்கவில்லை.

டொமினிக்கா சீனா ஃபிரெண்ட்ஷிப் மருத்துவமனையில் சோக்ஸியை ஆய்வு செய்த மருத்துவர்கள், அவருடைய வழக்கறிஞர்கள் கூறியிருக்கும் நகக் காயம் மிகவும் பழையது. புதிய காயங்களும் உண்டு. ஆனால் அவை, ஒருவரை சிறிது தள்ளினால் கூட ஏற்படும் அளவிலானவை என்று கூறியுள்ளனர்.

மே 23 அன்று ஆன்டிகுவா மற்றும் பார்படாவில் இருந்து மர்மமான முறையில் காணாமல் போயிருந்தார். 2018ம் ஆண்டு முதல் அந்நாட்டின் பிரஜையாக அவர் அங்கு வசித்து வரூகிறார்.
அவருடைய காதலி என்று கூறப்படும் ஒருவருடன் டொமினிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக நுழைந்த காரணத்தால் அவர் தடுத்து நிறுத்தப்பட்டார் என்று டொமினிக்கா கூறியுள்ளது.

ஆனால் அவருடைய வழக்கறிஞர்கள், ஜாலி ஹார்பரில் இருந்து அவர் கப்பல் மூலமாக கடத்தி செல்லபப்ட்டதாக குற்றம் சுமத்தியுள்ளனர். டொமினிகா உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், சட்டவிரோதமாக நுழைந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்க, ரோசா மாஜிஸ்திரேட் முன் சோக்ஸி ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு அவர் குற்றவாளி அல்ல என்று ஒப்புக் கொண்டார், ஆனால் அவருக்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. அவரது வழக்கறிஞர்கள் தாக்கல் செய்த ஹேபியாஸ் கார்பஸ் மனு மீதான விசாரணையை டொமினிகா உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

பஞ்சாப் நேஷனல் வங்கியில் (பிஎன்பி) ரூ .13,500 கோடி மோசடி செய்த விவகாரம் தெரிய வருவதற்கு சில நாட்களுக்கு முன்பு சோக்ஸியும் அவருடைய உறவினர் நீரவ் மோடியும் நாட்டை விட்டு தப்பி ஓடினர் என்பது குறிப்பிடத்தக்கது. லெட்டர்ஸ் ஆஃப் அண்டர்டேக்கிங் (லோயு) பெற இருவரும் அரசு வங்கியின் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது, இதன் அடிப்படையில் அவர்கள் வெளிநாட்டு வங்கிகளில் இருந்து பெற்ற கடன்களும் இன்னும் திருப்பி செலுத்தப்படவில்லை.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Antigua police has started investigating mehul choksi abduction