ஒரு குடும்பத்தில் ஒருவர் இந்தியர்… மற்றொருவர் இந்தியர் இல்லை… குழப்பம் தரும் என்.ஆர்.சி பட்டியல்

Foreigner Tribunal -ல் வழக்கு பதிவு செய்து வெற்றி பெற்றவர்களின் பெயர்களையும் பட்டியலில் அப்டேட் செய்யவில்லை என வருத்தம்

By: September 3, 2019, 2:07:56 PM

 Abhishek Saha

Assam NRC Issue : சனிக்கிழமை காலை அசாம் மாநிலத்திற்கான குடிமக்கள் பதிவேடு பட்டியல் வெளியானது. அதில் 19 லட்சம் மக்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. இதனைத் தொடர்ந்து அம்மக்கள் என்.ஆர்.சி. சேவ கேந்திராவை அணுகி பல்வேறு புதிய ஆவணங்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அசாம் மாநிலத்தின் கல்வித் துறையில் நான்காம் நிலை பணியாளராக, மொஹிமரி கிராமத்தில் பணியாற்றி வந்த அப்துஸ் சுபான் ஆகஸ்ட் 17ம் தேதி உயிரிழந்தார். அவரின் குடும்பம் என்.ஆர்.சி. பட்டியலால் தற்போது பிரிந்து போய் உள்ளது. என்.ஆர்.சியில் டேட்டா எண்ட்ரி ஆப்பரேட்டராக பணியாற்றும் அவருடைய மகன் ஜுபைர் ஹூசைன், அரிஃபுல், யாஸ்மீன் ஆகியோரது பெயர்கள் அந்த பட்டியலில் இடம்பெறவில்லை. ஆனால் அவருக்கு நேரே முத்த சகோதரரான ஃபைசல் மற்றும் சகோதரி சல்மா ஆகியோரின் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

எங்களுடைய தாத்தா பெயர் 1951ம் ஆண்டு வெளியிடப்பட்ட என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆனால் எங்களின் பெயர்கள் இடம் பெறவில்லை. என்னுடைய பெற்றோர்களும், மூத்த சகோதர்களும் இந்தியர்கள். ஆனால் நான் இந்தியர் இல்லையாம்… என்ன இது? என்று வருத்தம் தெரிவிக்கிறார் ஜூபைர்.

100 கி.மீ அப்பால் அமைந்திருக்கும் போங்கைகாவுன் என்ற மாவட்டத்தில் அமைந்திருக்கிறது ஜோகிகோபா என்ற பகுதி. அங்கு வசித்து வருகிறார் அகமது தோவெப். இவருடைய பெற்றோர்கள் மற்றும் 5 உடன் பிறந்தவர்களின் பெயர்கள் என்.ஆர்.சி. பட்டியலில் இடம் பெற்றுள்ளது. ஆனால் என்னுடைய பெயர் இடம் பெறவில்லை. இத்தனைக்கும் அவர் அசாம் இளைஞர் காங்கிரஸில் ஒரு உறுப்பினர்.

என்னுடைய தாத்தாவின் பெயர் 1951ம் ஆண்டு என்.ஆர்.சி. பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது. எங்களுக்கு சொந்தமான நிலங்களின் பட்டாக்கள் 1962ல் பதியப்பட்டிருக்கிறது. என்னுடைய மொத்த குடும்ப உறுப்பினர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் நானோ? என்று கவலையுடன் கேள்வி கேட்கிறார் தோவெப்.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

தொழில்நுட்ப கோளாறு, அலுவக தரப்பு கோளாறு அல்லது பர்சனல் அஜெண்டா என்ற எந்த காரணத்தினாலும் இந்த பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டிருக்கலாம் என்றூம் கூறுகிறா தோவெப்.  சோனித்பூர் மாவட்டத்தில் இருக்கும் தெஸ்பூர் டவுனில் இருக்கிறார் பரிமல் பட்டாச்சார்ஜீ. அவருக்கு வயது 77. அவர் என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார். ஆனால் அவருடைய மனைவி, மூத்த மற்றும் ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளர் ரீனா பட்டாச்சார்ஜீ (71) அந்த பட்டியலில் இடம் பெறவில்லை.

மேற்கு வங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்தார் ரீனா. பிறகு பி.எட் பட்டம் 1969-ல் பெற்றார். என்னுடைய குடும்பத்தில் அனைவரும் என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் என்னுடைய மனைவியின் பெயர் மட்டும் அதில் இடம் பெறவில்லை என்று வருத்தம் தெரிவிக்கிறார் அந்த வயதான மனிதர்.

கச்சார் மாவட்டத்தில் இருக்கும் உதார்பாண்ட் பகுதியில் இருப்பவர் ஜபா நமாஷுத்ரோ (35). அவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அவருடைய பெயர், கடந்த முறை வெளியான என்.ஆர்.சி பட்டியலில் இடம் பெறவில்லை. அதனை எதிர்த்து ஃபாரினர் ட்ரிபுனலில் வழக்கு பதிவு செய்து 2017ல் வெற்றியும் பெற்றார்.

ஆனாலும் ஃபாரினர் ட்ரிபுனலில் இடம் பெற்றிருக்கும் நபர்களின் பெயர் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை என்றும் அறிவித்துள்ளனர். இதனால் ஜபா மிகவும் மனம் உடைந்துள்ளார். ஃபாரினர் ட்ரிபுனலின் இறுதி முடிவினை நாங்கள் சமர்பித்தோம். இருப்பினும் எங்களின் பெயர்கள் பட்டியலில் அப்டேட் செய்யவில்லை என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Assam nrc issue retired teacher nsui leader staff at nrc seva kendra

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X