அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு குறித்து கடந்த ஒரு வாரமாக பிரச்சனைகள் நீடித்து வருகிறது. இந்த அசாம் குடிமக்கள் வரைவு பதிவேட்டில் இருந்து சுமார் 40 லட்சம் பேரை நீக்கியிருக்கிறது அசாம் அரசு.
அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு விவகாரம் :
அந்த நீக்கப்பட்ட பட்டியலில் இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரின் குடும்ப உறுப்பினர்களும் அடங்குவர். இதனால் பாதிப்பிற்கு உள்ளாகி இருக்கும் மக்களை காண திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினை சேர்ந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் சென்றுள்ளனர்.
ஆனால் அசாம் அரசு அவர்கள் அனைவரையும் விமானநிலையத்தில் பிடித்து வைத்திருக்கிறது. 144 தடை உத்தரவு இருக்கும் பட்சத்தில் இரண்டு இரண்டு நபர்களாக மக்களை சந்திப்பதில் என்ன பிரச்சனை இருக்கப் போகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளார் மேற்கு வங்க முதல்வர் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜீ.
அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு குறித்து சர்ச்சையான கருத்தினை வெளியிட்டதிற்காக மம்தா மீது நேற்று அப்பர் அசாம் இளைஞர் பாஜக தலைவர் வழக்கு ஒன்றினை பதிவு செய்திருக்கிறார்.
மம்தா மீது கொடுக்கப்பட்ட புகார் பற்றி படிக்க
August 2018
இது குறித்து கருத்து தெரிவித்த மம்தா, இது முழுக்க முழுக்க பாஜகாவின் பயந்த நிலைப்பட்டினை காட்டுகிறது. இந்த செயல்களே அவர்களின் முடிவிற்கு வழிகாட்டுகிறது.
அசாம் குடிமக்கள் வரைவு பதிவேடு குறித்து மக்களை சந்திக்கச் சென்ற பிரதிநிதிகள்
திரிணாமுல் காங்கிரஸ்ஸைச் சேர்ந்த உறுப்பினர்கள் எட்டு நபர்கள் இன்று மதியம் அசாம் சென்றுள்ளனர். அதில் மூன்று பெண் எம்.பிக்கள் மற்றும் ஒரு பெண் எம்.எல்.ஏக்கள் அடங்குவர்.
இது குறித்து லோக் சபா எம்.பி பரசத் ககோலி கோஷ் குறிப்பிடுகையில் இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் இருக்கின்றார்கள். அவர்கள் எங்களுடைய செல்போன்களை பறித்து வைத்துக் கொண்டனர். மேலும் எங்களை புகைப்படம் பிடித்து வைத்துள்ளனர்.
எதன் அடிப்படையில் இப்படி செய்கிறார்கள் என்று எங்களுக்குப் புரியவில்லை. கட்சித் தலைமை இது குறித்து பேசும் வரை இங்கிருந்து நாங்கள் நகர்வதாக இல்லை என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.