மும்பையில் 6 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 34-ஆக அதிகரித்துள்ளது.
மும்பையில் இரண்டு நாட்களுக்கு முன்ன 315மி.மீ என்று மழை கொண்டித் தீர்ததது. 2005-ம் ஆண்டுக்கு பின்னர் மும்பையில் பெய்த மழையின் அதிகபட்ச அளவு இது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மழை காரணமாக மும்பை வெள்ளக்காடானது. இந்த நிலையில், தெற்கு மும்பையின் சவுகத் அலி ரோட்டில் பென்டிபஜாரில் பழமையான 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 34-பேர் உயிரிழந்துள்ளனர். 117 ஆண்டுகள் பழமையான அந்த கட்டடமாது நேற்று காலை 8.30 மணிக்கு திடீரென இடிந்து விழுந்தது. இது குறித்து தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பேரிடர் மேலாண்மை படையினர் 90 பேர் மற்றும் தீயணைப்பு படையினர் 200-பேர் இந்த மீட்புப் பிணியில் ஈடுபட்டனர்.கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியதால், இதுவரை 34-பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன. 46-பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.
கட்டடட இடிபாடுகளில் 6-7 பேர் சிக்கியிருக்கலாம் என இரண்டாம் நாள் மீட்பு பணியின்போது தீயணைப்புத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.. இதற்கிடையே, அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக அம்மாநில முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ், விசாரணை நடத்தத உத்தரவிட்டுள்ளார். மேலும், சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்ட தேவேந்திர பட்னாவிஸ், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/09/mumbai-759.jpg)
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் கூயியுள்ளதாவது: மும்பையில் கட்டடம் இடிந்து விபத்துக்குள்ளான சம்பவம் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிராத்திக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியானது, மகராஷ்டிர மாநில அரசை குற்றம்சாட்டியுள்ளது. முன்னதாகவே இந்த கட்டடத்தை இடிக்க அனுமதி வழங்கப்பட்டபோதிலும், ஏன் இந்த பழமை வாய்ந்த கட்டடம் இடிக்கப்படவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளது.
விபத்துக்குள்ளான இந்த கட்டடமானது 117 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.