Advertisment

வாக்காளர் பட்டியலில் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் நீக்கம்

உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

author-image
manik prabhu
Sep 28, 2017 20:56 IST
அடல் பிஹாரி வாஜ்பாய்

உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

Advertisment

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், அம் மாநிலத்தின் லக்னோ மாநகராட்சிக்குட்பட்ட பாபு பனார்ஸி தாஸ் வார்டு வாக்காளர் பட்டியலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் இருந்து வந்தது.

இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநில உள்ளாட்சித் தேர்தல் வாக்காளர் பட்டியலில் இருந்து முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. நீண்ட நாள்களாக குறிப்பிட்ட அந்த முகவரியில் வாஜ்பாய் வசிக்கவில்லை எனக் கூறி அவரது பெயரை மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் நீக்கியுள்ளனர்.

இதுகுறித்து மண்டல அலுவலர் அசோக் குமார் சிங் கூறுகையில், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் பாபு பனாரசி தாஸ் வார்டில் இடம் பெற்றிருந்தது. கடந்த 2000-ஆம் ஆண்டில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் வாஜ்பாய் வாக்களித்தார். அதை தொடர்ந்து, 2004-ஆம் ஆண்டில் நடைபெற்ற மக்களவை தொகுதி தேர்தலிலும் இங்கு வாக்களித்தார். அதன்பின்னர், உடல்நிலை சரியில்லாததால் வாஜ்பாய் நீண்ட காலமாக இந்த வார்டில் வசிக்கவில்லை. எனவே அவரது பெயர் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று விளக்கமளித்துள்ளார்.

#Lucknow #Atal Bihari Vajpayee
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment