பதட்டங்களை தணிக்க வாங் – தோவல் பேச்சுவார்த்தையை முன்மொழியும் பெய்ஜிங்

ஜூன்.15ம் தேதி, சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதல்களில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, சிறப்பு பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகள் தரப்பிலும் துருப்புக்கள் விலக்கப்பட்டன. இதை பெய்ஜிங் முன்மொழிந்தது. கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை அடுத்து…

By: July 8, 2020, 10:50:39 AM

ஜூன்.15ம் தேதி, சீன துருப்புக்களுடன் ஏற்பட்ட மோதல்களில் 20 இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பிறகு, சிறப்பு பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிலையில், கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாடுகள் தரப்பிலும் துருப்புக்கள் விலக்கப்பட்டன. இதை பெய்ஜிங் முன்மொழிந்தது.

கல்வான் பள்ளத்தாக்கு சம்பவத்தை அடுத்து பதட்டமான சூழ்நிலையை தீர்க்க சீனா, மூத்த பிரதிநிதிகள் கொண்ட பேச்சுவார்த்தைகளை முன்மொழிந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிகிறது.

இந்தியா-சீனா எல்லை விவகாரங்களுக்கான ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்புக்கான வேலை முறை (WMCC) உள்ளிட்ட இராஜதந்திர மற்றும் ராணுவ தரப்பு நிலைமையை விரிவாக்க “பொருத்தமானது” என்று இந்திய தரப்பு கூறியது.

முதல் கட்டமாக 375 பேருக்கு கோவாக்சின் பரிசோதனை; தாமதமாகும் மாடர்னா இறுதிக் கட்ட சோதனை

ஆனால் பெய்ஜிங் எந்தவொரு அர்த்தமுள்ள முன்னோக்கு முன்னெடுப்பையும் மேற்கொள்ள மூத்த அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளை வலியுறுத்தியது. அப்போதுதான் சீன மாநில கவுன்சிலரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யிக்கும், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுக்கும் இடையே சந்திப்பு நடத்த திட்டமிடப்பட்டது.

ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து, சீன வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையில், “தற்போதைய எல்லை நிலைமையை தளர்த்துவது” மற்றும் “நேர்மறையான பொதுவான புரிதல்களை எட்டியது” குறித்து இரு தரப்பினரும் நேர்மையான மற்றும் ஆழமான கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

தோவல் மற்றும் வாங் ஆகியோர் மூத்த பிரதிநிதிகளாக இருந்து எல்லை பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர். அவர்கள் இதற்கு முன்பு 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் சந்தித்துள்ளனர். அவர்கள் கடைசியாக 2019 டிசம்பரில் சந்தித்தபோது, இருபுறமும் பொது சொல்லாட்சியைப் பொருட்படுத்தாமல் பிரச்சினைகளில் “ஒருவருக்கொருவர் வெளிப்படையாக” இருக்க முடிவு செய்தனர்.

அதில், இரண்டு மூத்த பிரதிநிதிகளும் working-level mechanisms-ஐ ஒப்புக் கொண்டனர். WMCC அல்லது இராணுவத் தளபதிகள் எந்தவொரு எல்லைப் பிரச்சினையிலும் ஒருவருக்கொருவர் ஈடுபட முடியும், அவை ஒரு தீர்மானத்தின் ஒப்புதலுக்கான இறுதி அதிகாரமாக இருக்க வேண்டும் என்று ஒப்புக் கொள்ளப்பட்டது.

மூத்த பிரதிநிதிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தைக்கு பெய்ஜிங்கின் அறிவுறுத்தலின் பேரில், தரைத்தளத்தில் XIV கார்ப்ஸ் கமாண்டர் லெப்டினென்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், இந்திய WMCC அணியை வழிநடத்தும் இணை செயலாளர் (கிழக்கு ஆசியா) நவீன் ஸ்ரீவாஸ்தவா மற்றும் பெய்ஜிங்கில் சீனாவுக்கான தூதர் விக்ரம் மிஸ்ரி ஆகியோர் கீழ் மட்டத்தில் செய்யப்படும் எந்தவொரு உறுதிப்பாட்டிற்கும் வரம்புகள் இருக்கலாம் என்று டெல்லி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தொற்றுநோய் மருத்துவத்துறையின் மூத்த விஞ்ஞானி ககன்தீப் காங் திடீர் ராஜினாமா

வாங், இந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்தபடுவதற்கான மற்றொரு காரணி என்னவென்றால், அவர் முந்தைய வெளியுறவு அமைச்சர்களை விட மிகவும் சக்திவாய்ந்தவர், ஏனெனில் அவர் 2018 இல் மாநில கவுன்சிலரானார். வெளியுறவு அமைச்சரின் பதவியில் தனது முன்னோடிகளை விட அதிக அதிகாரத்தை அவர் பயன்படுத்துகிறார்.

அவர் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தபோது, 2017 ல் டோக்லாம் நெருக்கடியின் போது காணப்பட்ட அவரது வலுவான நிலைப்பாடு காரணமாக, Xi மீண்டும் 2018 ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, வாங் பதவி உயர்வு பெற ஒரு காரணமாக அமைந்ததாக கூறப்படுகிறது.

இரண்டு வாரங்களுக்கும் மேலாக தனிமைப்படுத்தப்பட்ட பின்னர் கடந்த வாரம் பதவிக்கு திரும்பியதோவல், வாங்குடனான பேச்சுவார்த்தையை ஜூலை 5ம் தேதிக்கு திட்டமிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Beijing proposed wang doval talks after galwan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X