தண்ணீர் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.21 வசூல் செய்த நிறுவனத்துக்கு ரூ.12,000 இழப்பீடு தொகை வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த ராகவேந்திரா என்பவர், பன்னாரகட்டா ராயல் மீனாக்ஷி மாலில் உள்ள ஜிஎஸ் எண்டர்பிரைசஸில் "கின்லே" தண்ணீர் பாட்டில் வாங்கியுள்ளார். அந்த தண்ணீர் பாட்டிலுக்கு ரூ.19-க்கு பதிலாக ரூ.40 கூடுதலாக வசூல் செய்துள்ளனர். அதே நாளன்று மாலையில் ஜெயா நகரில் உள்ள மற்றொரு கடையில் அதே "கின்லே" தண்ணீர் பாட்டிலை ராகவேந்திரா வாங்கியுள்ளார். அதற்கு ரூ.19 வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த இரு ரசீதுகளையும் சேர்த்து, கடந்த 2015-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெங்களூர் நகர மாவட்ட நுகர்வோர் பிரச்சினைகள் குறைப்பு மன்றத்தில் ராகவேந்திரா வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஜிஎஸ் எண்டர்பிரைசஸ் மற்றும் கோகோ கோலா நிறுவனம் ஆகியவற்றை இணைத்துள்ளார்.
இந்த வழக்கு விசாரணை கடந்த ஆண்டு முதல் விசாரிக்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், இந்த வழக்கின் மீதான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட நபருக்கு ரூ.12,000 இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இது பொய்யான குற்றச்சாட்டு என அந்த கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.