விஐபி வருகிறார் என்றால் அந்த பகுதியில் உள்ள சாலை வழியே வாகனங்கள் செல்வது என்பது படாதபாடு தான். தொலை தூரத்தில் இருந்து வரும் விஜபி ஒருவருக்காக, முன்னதாகவே சாலைகளில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு நடத்தப்படுவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதில் ஆம்புலன்ஸ் மட்டும் விதிவிலக்கான என்ன, உயிருக்கும் போராடும் நபர் ஆம்புலன்ஸில் உள்ளே இருக்க, ஆம்புலன்ஸ் டிராபிக்கில் சிக்கிக்கொண்டிக்கும். இப்படியான சூழலே பழக்கமாகிவிட்டது, சிட்டிகளில்.
இந்நிலையில், பெங்களூரில் உள்ள டிரினிட்டி சர்கிள் பகுதியில் டிராபிக் சப்-இன்ஸ்பெக்டர் நிஜாலிங்கப்பா பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த பகுதியானது மிகவும் போக்குவரத்து நெரிசல் மிகுந்தது. இந்நிலையில், குடியரசுத்தலைவர் அந்த சாலை வழியாக அப்பகுதியில் நடைபெற இருந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவதற்காக செல்ல இருந்தார். ஆனால், அதற்கு முன்பாக ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார் அந்த டிராபிக் போலீஸ். இந்த செயலையொட்டி நிஜாலிங்கப்பாவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
இது தொடர்பாக நிஜாலிங்கப்பா கூறும்போது: நான் பணியில் இருந்த போது மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த ஓரு ஆம்புலன்ஸ் டிராஃபிக்கில் சிக்கிக் கொண்டிருப்பதைக் கண்டேன். அந்த ஆம்புலன்ஸை எப்படியாவது மருத்துவமனைக்கு விரைவாக செல்ல வழி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதற்காக என்னுடன் பணியாற்றும் மற்ற காவலருக்கு அதுகுறித்து தகவல் தெரிவித்து ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்தேன் என்றார்.
இதனையொட்டி துணை கமிஷ்னர் நிஜாலிங்கப்பாவிற்கு பாராட்டுகள் தெரிவித்துள்ளார்.
18, 2017