”சாம்பார் சரியில்லை” என கணவர் கூறியதால் தற்கொலை செய்த பெண்: பெங்களூருவில் விபரீதம்

பெங்களூருவில் தான் சமைத்த ‘சாம்பார்’ நன்றாக இல்லை என கணவர் கூறியதாக் நடுத்தர வயது பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

By: September 18, 2017, 4:48:00 PM

பெங்களூருவில் தான் சமைத்த ‘சாம்பார்’ நன்றாக இல்லை என கணவர் கூறியதாக் நடுத்தர வயது பெண் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் சோளூர்பாளையம் எனும் பகுதியை சேர்ந்தவர் நாகரத்னா. இவரது கணவர் ஸ்ரீநிவாஸ் தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வந்த நிலையில், பக்கவாதம் ஏற்பட்டு கடந்த பல வருடங்களாக வீட்டிலேயே உள்ளார். இவர்களது மகன் மிதும், மின்சாதன பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியதிலிருந்து ஸ்ரீநிவாஸ் கடும் மன அழுத்தத்தில் உள்ளதாகவும், அதனால் அவ்வப்போது அவருக்கும் மனைவி நாகரத்னாவுக்கும் தகராறு ஏற்படும் எனவும் காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நாகரத்னா சமைத்த சாம்பார் தனக்கு பிடிக்கவில்லை என ஸ்ரீநிவாஸ் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால், மனவேதனை அடைந்த நாகரத்னா வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக காவல் துறையினர் தரப்பில் கூறப்படுகிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Bengaluru woman hangs herself to death because her husband didnt like the sambar she cooked

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X