scorecardresearch

ராகுலின் 117 பாரத் ஜோடோ யாத்திரிகர்கள்.. இவர்களால் சாத்தியம் ஆகுமா?

யார் ஆர்வம் காட்டினாலும், யார் வந்தாலும்..அவர்களை நேர்காணல் செய்தோம்,. பிறகு நாங்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம், ”என்று சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

ராகுலின் 117 பாரத் ஜோடோ யாத்திரிகர்கள்.. இவர்களால் சாத்தியம் ஆகுமா?
ஆகஸ்ட் 22, 2022 திங்கட்கிழமை, புதுதில்லியில் உள்ள கான்ஸ்டிடியூஷன் கிளப்பில் 'பாரத் ஜோடோ யாத்ரா' மாநாட்டின் போது ராகுல் காந்தி. (PTI)

5 மாதங்களில் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3,570 கிலோமீட்டர் நடந்து செல்வது கடினமான பணியாக இருக்கலாம். ஆனால் 56 வயதான காங்கிரஸ் தலைவர் விஜய் குமார் சாஸ்திரி, செப்டம்பர் 7 ஆம் தேதி தொடங்கும் காங்கிரஸின் பாரத் ஜோடோ யாத்திரையின் ஒரு பகுதியாக, ராகுல் காந்தியுடன் இணைந்து நடப்பதால் உற்சாகமாக இருக்கிறார். இந்த நீண்ட அணிவகுப்பில் ராகுலுடன் நடக்கும் நாடு முழுவதும் உள்ள 117 காங்கிரஸ் தலைவர்களில் சாஸ்திரி மிகவும் வயதானவர்.

ஜம்மு காஷ்மீர் காங்கிரஸின் கிசான் செல் துணைத் தலைவர் சாஸ்திரி கூறுகையில், “எனக்கு ஐம்பது வயது இருக்கலாம், ஆனால் காங்கிரஸின் மீதான எனது ஆர்வம் அதிகமாகவே உள்ளது என்றார்.

அருணாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதான இளைஞர் காங்கிரஸ் தலைவர் அஜாம் ஜோம்ப்லா, ராகுலின் சக யாத்திரிகர்களில் இளையவர். ராகுல்’ நாட்டிற்கு தேவையான தலைவர் என்று ஜோம்ப்லா நம்புகிறார்.

சாஸ்திரி மற்றும் ஜோம்ப்லாவைத் தவிர, காங்கிரஸால் தேர்ந்தெடுக்கப்பட்ட 117 யாத்ரிகளின் பட்டியலில், தீப்பொறி பேச்சாளர் கன்ஹையா குமார், காங்கிரஸ் ஊடகத் துறைத் தலைவர் பவன் கேரா, பஞ்சாப் முன்னாள் அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா, பீகார் முன்னாள் எம்எல்ஏ அமித் குமார் துன்னா, கேரள முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டி மகன் சாண்டி உம்மன் , இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் பிரதிபா ரகுவன்ஷி, சீதாராம் லம்பா, இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் கேசவ் சந்த் யாதவ், உத்தரகாண்ட் மகிளா காங்கிரஸ் தலைவர் ஜோதோ ரவுடேலா, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தகவல் தொடர்பு துறை செயலாளர் வைபவ் வாலியா ஆகியோர் அடங்குவர்.

பாரத் ஜோடோ யாத்ராவின் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய சிங், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி’ கட்சியின் முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரதேச காங்கிரஸ் கமிட்டிகளுக்கு, இந்த அணிவகுப்பில் பங்கேற்க ஆர்வமாக உள்ள தலைவர்களின் பெயர்களை அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளது என்றார்.

117 பேரை தேர்வு செய்வதற்கு முன், சிங் மற்றும் மூத்த தலைவர்கள் ஆர்வம் காட்டிய அனைவரையும் நேர்காணல் செய்தனர்.

யார் ஆர்வம் காட்டினாலும், யார் வந்தாலும்..அவர்களை நேர்காணல் செய்தோம்,. பிறகு நாங்கள் அவர்களைத் தேர்ந்தெடுத்தோம், ”என்று சிங் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். 3500 கிமீகள்…. ஐந்து மாதங்கள்? அவர்களால் அதைச் செய்ய முடியுமா இல்லையா என்பதை மதிப்பீடு செய்ய வேண்டும், ”என்று அவர் கூறினார்.

காங்கிரஸின் சித்தாந்தம் குறித்தும் அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டதா என்று கேட்டதற்கு, சிங், “கட்சியின் சித்தாந்தத்தைப் பொறுத்த வரையில் அது அவர்களின் பெயர்களை பரிந்துரைத்தவர்களால் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும். நாங்கள் அதைப் பற்றி ஆராயவில்லை. ”

பெரும்பாலான யாத்திரிகர்கள் 30 அல்லது 40களில் இருப்பவர்கள். அவர்களில் நான்கு அல்லது ஐந்து பேர் பல்வேறு சிவில் சமூகக் குழுக்களைச் சேர்ந்தவர்கள் என்று காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

எக்ஸ்பிரஸிடம் பேசிய சாஸ்திரி, “நான் ஜம்முவுக்கு அருகிலுள்ள மலைப்பாங்கான பகுதியைச் சேர்ந்தவன். என் வாழ்நாள் முழுவதும் நடந்திருக்கிறேன். எல்லா வழிகளிலும் நடக்க முடியுமா என்று சிங் என்னிடம் கேட்டார். ராகுல் நாட்டை ஒருங்கிணைக்க விரும்பினால், நான் ஏன் நடக்கமாட்டேன்? என்று நான் அவரிடம் சொன்னேன்.

“நான் ஒரு பெரிய தலைவராக விரும்பவில்லை. இவ்வளவு பெரிய முடிவை ராகுல் எடுத்துள்ளார். அவருக்கு அப்படிப்பட்ட கஷ்டங்கள் பழக்கமில்லை… நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த குடும்பத்தை சேர்ந்தவர். நாம் என்ன தியாகம் செய்தோம்? நாடு நமக்கு அனைத்தையும் கொடுத்துள்ளது. பதிலுக்கு நாம் என்ன கொடுத்தோம்?

ஜொம்ப்லா கூறுகையில், “அருணாச்சல பிரதேசத்தில் இருந்து இந்த அணிவகுப்புக்கு இரண்டு பேர் மட்டுமே செல்கிறார்கள், ஆனால் ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டர்களும் உத்வேகத்துடன் இருக்கிறார்கள். நாடு ஒரு நல்ல தலைவரால் வழிநடத்தப்பட வேண்டும் என்று நாம் அனைவரும் விரும்புகிறோம். அந்த ஆளுமை ராகுலுக்கு உண்டு. யாத்திரை ஒரு சமூக நடவடிக்கை போன்றது. நாட்டை ஒற்றுமையாக வைத்திருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும்” என்றார்.

யாத்திரையைத் தொடங்குவதற்கு “மனதளவில் தயாராக இருப்பதாக” கூறிய, ஜொம்ப்லா, “ஆனால் என்னால் உடல்ரீதியாக அதைச் செய்ய முடியுமா என்பதை யாத்திரை தொடங்கும் போது தெரிந்துகொள்வேன்” என்றார்.

117 பேர் கொண்ட பட்டியலில் 34 பெண் தலைவர்கள் உள்ளனர். 15 யாத்திரிகர்களைக் கொண்ட மிகப்பெரிய குழு உத்தரப் பிரதேசத்தில் இருந்து வருகிறது, அதைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசம் (10), மற்றும் மகாராஷ்டிரா (9) இருக்கிறது. அணிவகுப்பின் போது, ​​ராகுலும் அவரது சக யாத்திரிகர்களும் இரவு நேரங்களில் மேக்-ஷிப்ட் கண்டெய்னரில் தூங்குவார்கள். அவை இப்போது கன்னியாகுமரிக்கு செல்கின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Bharat jodo yatra rahul gandhi vijay kumar shastri ajam jombla

Best of Express