Advertisment

பீகார் முதல்வர் நிதீஷ் குமார் ராஜினாமா; பாஜக உறவை முறித்து புதுக் கூட்டணி அமைத்த நிதீஷ்

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் இன்று ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார். இதன் மூலம், நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி முறிந்தது.

author-image
WebDesk
New Update
Bihar chanakya nitish kumar

பிகார் மாநிலத்தின் முதல்-அமைச்சராக 8ஆவது முறையாக பதவியேற்கவுள்ள நிதிஷ் குமார்

பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், பீகார் முதல்வர் நிதீஷ்குமார் இன்று ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து ராஜினாமா கடிதம் அளித்தார். இதன் மூலம், நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்வது இது இரண்டாவது முறையாகும்.

Advertisment

ஐக்கிய ஜனதா தளம் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ராஷ்டீரிய ஜனதா தளம் (ஆர்.ஜே.டி) கட்சிகள் பாட்னாவில் தங்கள் கட்சி எம்.எல்.ஏ.-க்களின் கூட்டத்தை தனித்தனியாக நடத்தியது. பீகாருக்கான சிறப்பு அந்தஸ்து தொடர்ந்து மறுக்கப்படுவது போன்ற விவகாரங்களில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக இடையே இரண்டு மாதங்களுக்கும் மேலாக முரண்பாடு நிலவி வருகிறது. பீகார் மாநில சட்டமன்ற (விதான் சபா) நூற்றாண்டு விழாவிற்கு, பாஜக-வைச் சேர்ந்த, சட்டமன்ற சபாநாயகர் அனுப்பிய அழைப்பிதழில், நிதீஷின் பெயர் இல்லாதது, ஐக்கிய ஜனதா தளம் கட்சியினரால் அவமரியாதையாகப் பார்க்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் பல்வேறு பிரச்னைகள் நிலவி வரும் நிலையில், முதல்வர் நிதீஷ் குமார் ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து ராஜினாமா கடிதத்தை செவ்வாய்க்கிழமை அளித்தார். கடந்த 8 ஆண்டுகளில் பாஜகவுடன் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணியை முறித்துக் கொள்வது இது இரண்டாவது முறை. இன்று காலை, ஐக்கிய ஜனதா தளம் கட்சி மற்றும் எதிர்க்கட்சியான ஆர்.ஜே.டி கட்சிகள் பாட்னாவில் தங்கள் எம்எல்ஏக்களின் கூட்டத்தை தனித்தனியாக நடத்தியது.

இதற்கிடையில், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நாடாளுமன்ற வாரியத் தலைவர் உபேந்திர குஷ்வாஹா, இந்தியில் பதிவிட்ட ஒரு ட்வீட்டில், “புதிய வடிவத்தில் புதிய கூட்டணியின் தலைமை ​​நிதிஷ் குமாருக்கு வாழ்த்துகள்” என்று தெரிவித்தார்.

முன்னதாக, நிதிஷ் குமார் தலைமையிலான கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்கள் இன்றைய சந்திப்பு வழக்கத்திற்கு மாறானது இல்லை என்று கூறியுள்ளனர். “எங்கள் கட்சி கடந்த காலங்களில் இதுபோன்ற பல எம்.பி.க்கள் மற்றும் எம்எல்ஏக்களின் கூட்டங்களை நடத்தியுள்ளது. கட்சியின் விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கவே தற்போதைய கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் எந்த பெரிய நெருக்கடியும் ஏற்பட்டதாக கேள்விப்படவில்லை என்று ராஜ்யசபா எம்பி ராம்நாத் தாக்கூர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

இதனிடையே, மாநிலத்தில் உருவாகி வரும் அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்ய செவ்வாய்க்கிழமை மாலை பீகார் மாநில பாஜக முக்கிய கூட்டம் கூட்ட முடிவு செய்துள்ளது. பீகார் பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் துணை முதல்வர்கள், மாநில முன்னாள் தலைவர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதல்வர் தர்கிஷோர் பிரசாத் இல்லத்திலும் பாஜக கூட்டம் நடைபெற்றது. அங்கே பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஐக்கிய ஜனதா தளம் கூட்டத்திற்கு வரவிருக்கும் வருங்கால பங்கேற்பாளர்களில் பலர் பாஜக உடனான கட்சியின் உறவுகள் மறுசீரமைப்புக்கு அழைப்பு விடுக்கும் அளவிற்கு மோசமடைந்துள்ளது என்பதை மறுத்தனர். இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (மதச்சார்பற்ற), என்.டி.ஏ., மற்றும் காங்கிரஸும் தங்கள் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை செவ்வாய்க்கிழமை நடத்தியது.

நிதீஷ் குமார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, நிதீஷ் குமார் பீகார் மக்களுக்கும், பாஜகவுக்கும் துரோகம் இழைத்ததாக பீகார் மாநில பாஜக தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் செவ்வாய்க்கிழமை குற்றம் சாட்டினார். “2020 தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியின் கீழ் இணைந்து போராடினோம், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜகவுக்கு வெற்றி கிடைத்தது. இருந்தபோதிலும் நாங்கள் அதிக இடங்களில் வெற்றி பெற்றோம். அதனால், நிதிஷ்குமார் முதல்வரானார். இன்று பீகார் மக்களுக்கும் பாஜகவுக்கும் துரோகம் நடந்திருக்கிறது” என்று சஞ்சய் ஜெய்ஸ்வால் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

பாஜக தலைவரும், மத்திய அமைச்சருமான அஸ்வினி சௌபே, “நிதீஷ் குமார் "சந்தர்ப்பவாதி என்று குற்றம் சாட்டினார். துரோகம்" செய்பவர்கள் பீகாரின் வளர்ச்சியில் தடைகளை உருவாக்க விரும்புகிறார்கள் என்று அஸ்வினி சௌபே கூறினார்.

கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் உடனான பிளவை அடுத்து உருவாகி வரும் அரசியல் சூழ்நிலையை ஆய்வு செய்வதற்காக இன்று மாலை பாஜக முக்கிய குழு கூட்டத்தில் பங்கேற்பதற்காக பாட்னா செல்லும் போது விமான நிலையத்தில் அஸ்வினி சௌபே கருத்து தெரிவித்தார்.

“பாஜக யாரையும் ஒடுக்கவில்லை, யாருக்கும் துரோகம் இழைக்கவில்லை. பீகாருக்கு துரோகம் செய்பவர்கள் அதன் வளர்ச்சியில் தடைகளை உருவாக்க விரும்புகிறார்கள். பீகாரின் வளர்ச்சிக்கு அடல் பிஹாரி வாஜ்பாய் அரசு முதல் மோடி அரசு வரை நாங்கள் முன்னுரிமை அளித்துள்ளோம்” என்று சௌபே கூறினார்.

இதனிடையே, பீகாரில் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கான முன்னோட்டமாக மகாகட்பந்தன் தலைவராக நிதிஷ் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்று ஐக்கிய ஜனதா தளம் கட்சி வட்டாரங்கள் கூறியதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, நிதிஷ் குமார், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக பீகார் ஆளுநர் மாளிகையான ராஜ்பவன் சென்றடைந்தனர்.

ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணியில் பல்வேறு பிரச்சனைகளால் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பீகாரில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்த நிதீஷ் குமாரும் ஆர்.ஜே.டி தலைவர் தேஜஸ்வி யாதவும் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக ராஜ்பவனுக்கு ஆளுநரை சந்திக்க சென்றுள்ளனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Nitish Kumar Bihar Rjd Party Jd U
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment