Advertisment

பீகாரில் கூட்டணியை பின்னுக்கு தள்ளிய காங்கிரஸ்: 70-ல் போட்டி; 19-ல் வெற்றி

காங்கிரஸ் தனது வாக்குப் பங்கை 2015 ல் 6.66 சதவீதத்திலிருந்து இந்த முறை 9.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

author-image
WebDesk
New Update
Bihar election results

Bihar election results

Bihar election results : பீகாரில் சட்டமன்றத் தேர்தல் முடிகள் நேற்று(10.11.20) வெளியாவதில் தாமதம் ஏற்பட்ட நிலையில், நேற்று நள்ளிரவு முதல் முடிவுகள் வெளிவர தொடங்கின. ஆர்ஜேடி தலைமையிலான மாபெரும் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி பலவீனமான கூட்டணியாக உருவெடுத்துள்ளது.

Advertisment

70 இடங்களுக்கு போட்டியிட்ட காங்கிரஸ், வெறும் 14 இடங்களை வென்று, மேலும் 5 இடங்களில் முன்னிலை வகித்தது. வாக்கு விகிதம் 27 சதவீதம். இது பாஜகவுடன் எதிரான போராட்டத்தில் மோசமாக பார்க்கப்படுகிறது. சிபிஐ (எம்எல்), சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய மூன்று இடது கட்சிகள் தாங்கள் போட்டியிட்ட 29 இடங்களில் 17 இடங்களில் வெற்றி பெற்றன வாக்கு விகிதம் 58.6 சதவீதம்.

செவ்வாய்க்கிழமை இரவு 11.15 மணிக்கு தேர்தல் ஆணைய வலைத்தளத்தின் வெளியான குறிப்புகள் படி, 144 இடங்களுக்கு போட்டியிட்ட ஆர்.ஜே.டி, 60 இடங்களை வென்று 16-வது இடத்தில் உள்ளது . வாக்கு விகிதம் சுமார் 53 சதவீதம். போட்டியிட்ட 70 இடங்களில், காங்கிரஸ் 37 இடங்களில் பாஜகவுக்கு எதிராக நின்றது. ஆனால், வெறும் 7 இடங்களில் முன்னிலை வகித்தது.பாஜக வேட்பாளர்களிடம் தோல்வியுற்றதன் மூலம் காங்கிரஸ் செயின்பூர், கோபால்கஞ்ச் மற்றும் பரு ஆகியோர் மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டனர்.

ஒட்டுமொத்தமாக, காங்கிரஸ் 51 இடங்களை இழந்துவிட்டது. மேலும் எண்ணிக்கையில் பின் தங்கியவர்களில் நடிகர்-அரசியல்வாதி சத்ருகன் சின்ஹாவின் மகன் லவ் சின்ஹா, பங்கிபூரில், மற்றும் மூத்த சோசலிச தலைவர் ஷரத் யாதவின் மகள் சுபாஷினியும் உள்ளனர்.

எதிர்க்கட்சி கூட்டணியின் தலைவர் தீபங்கர் பட்டாச்சார்யா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம், பகிர்ந்து கொண்டது. "பகுத்தறிவு" முறையில் செய்யப்பட்டிருந்தால், விளைவு (முடிவு) வேறுபட்டிருக்கலாம்” என்று கூறினார்.

" இருக்கை ஒதுக்கீடு மிகவும் பகுத்தறிவுடையதாக இருந்திருந்தால் ... உதாரணமாக ... இடதுசாரிகளுக்கு குறைந்தபட்சம் 50 இடங்களும், காங்கிரசுக்கு 50 இடங்களும் இருக்கக்கூடும் .இது முடிவுகளை சிறப்பாக பாதிக்கக்கூடும் ”என்று சிபிஐ (எம்எல்) பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சார்யா கூறினார்.

எவ்வாறாயினும், கட்சி போட்டியிட்ட 70 இடங்கள் "பாரம்பரியமாக யுபிஏ / காங்கிரஸ் அல்லாத இடங்கள், அங்கு தேசிய ஜனநாயக கூட்டணியின் வாக்கு விகிதம் 95 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தது" என்று காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

காங்கிரஸ் தலைவர் ஒருவர் பகிர்ந்து கொண்டது “ஜே.டி.யு மற்றும் பாஜக ஆகியவை ஒன்று சேரும்போதெல்லாம் அவர்கள் சாதி மற்றும் சமூக அமைப்பின் அடிப்படையில் ஒரு கொடிய கலவையாக மாறுகிறார்கள். 2010 ல் பாஜகவும் ஜேடியுவும் இணைந்து போராடியபோது இந்த 70 இடங்களில் 65 இடங்களை வென்றது. பாஜக 36 ல் 33 ஐ வென்றது மற்றும் ஜேடியு 34 ல் 32 ஐ வென்றது. இதேபோல், 2019 மக்களவைத் தேர்தலில், பாஜகவும் ஜேடியுவும் இணைந்து போராடியது, அதே 70 இடங்களில் 67 இடங்களில் முன்னிலை வகித்தது. 26 பிரிவுகளில் 25 இடங்களில் பாஜகவும், 32 பிரிவுகளில் 28 இடங்களில் ஜே.டி.யுவும் முன்னிலை வகித்தன. ”

, 2015 ல் ஜே.டி.யூ இல்லாமல் போராடியபோது இந்த 70 இடங்களில் 24 இடங்களை பாஜக வென்றது. இந்த 70 இடங்களில் என்.டி.ஏ பாரம்பரியமாக வலுவாக இருப்பதால், காங்கிரஸை குற்றம் சாட்டுவது நியாயமற்றது என்றார்.

காங்கிரஸைப் பற்றி கவலைப்பட வேண்டியது என்னவென்றால், குறிப்பிடத்தக்க முஸ்லீம் மக்கள்தொகை கொண்ட ஒரு பிராந்தியமான சீமஞ்சலில் அதன் செயல்திறன். பிராந்தியத்தில் போட்டியிட்ட 11 இடங்களில், காங்கிரஸ் 5 இடங்களில் மட்டுமே வென்றது. மீதமுள்ள ஆறு இடங்களில், அமிம் மற்றும் பகதூர்கஞ்ச் இரண்டில் AIMIM முன்னிலையில் இருந்தது. பகதூர்கஞ்சில், வி.ஐ.பிக்குப் பிறகு காங்கிரஸ் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் சீமஞ்சலில் காங்கிரஸ் 8 இடங்களை வென்றது. ஒட்டுமொத்தமாக, காங்கிரஸ் கடந்த முறை போட்டியிட்ட 41 இடங்களில் 27 இடங்களை வென்றது. காங்கிரஸ் தனது வாக்குப் பங்கை 2015 ல் 6.66 சதவீதத்திலிருந்து இந்த முறை 9.5 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

ஆர்.ஜே.டி யின் ஒரு பகுதியினர் காங்கிரசுக்கு கிடைத்ததை விட குறைந்தது 15-18 இடங்கள் வழங்கப்பட்டதாக பதிவும் செய்துள்ளனர்.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment