பீகார் மாநிலத்தில் வீட்டில் கழிவறை கட்டித்தராத மாமனார் மீது மருமகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
பீகார் மாநிலம் முசாஃபர்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் ஜோதி. இவரது கணவர் தமிழ்நாட்டில் தங்கி வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அவரது கணவர் வீட்டில் கழிவறை இல்லாத்தால், விரைவில் கழிவறை கட்டுமாறு மாமானாரிடம் கூறிக்கொண்டு வந்திருக்கிறார் ஜோதி.
ஆனால், அவரது மாமனார் வீட்டில் கழிவறை கட்டித் தராமல் இருந்திருக்கிறார். இதனால், ஜோதி தன் தாய் வீட்டிலேயே தங்கியிருந்து, தன் கணவர் தமிழ்நாட்டிலிருந்து ஊருக்கு வரும்போது மட்டும் ஜோதி தன் மாமனார் வீட்டுக்கு வந்து சென்றிருக்கிறார்.
இந்நிலையில், வீட்டில் கழிவறை கட்ட அவரது மாமனார் தாமதித்து வந்ததால், ஜோதி தன் மாமனார் மற்றும் கணவரின் சகோதரர் மீது முசாஃபர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், ஜோதியின் மாமனார் மற்றும் கணவரின் சகோதரரை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதன்பின், விரைவில் வீட்டில் கழிவறை கட்ட அவரது மாமனார் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். இதையடுத்து, ஜோதி தன் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டார்.