கர்நாடகாவின் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை தேர்வு : மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவிப்பு

Tamil NewsUpdate : கர்நாடக மாநிலத்தின் புதிய முதல்வராக முன்னாள் மேலவை உறுபபினர் பசுவராஜ் பொம்மை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Karnadaka New Cm Basuvaraj Bommai : பாகஜ ஆட்சி நடைபெற்று வரும் கர்நாடகத்தில் முதல்வராக இருந்த எடியூரப்பா பதவி விலகிய நிலையில், தற்பேது புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை நியமிக்கப்பட்டுள்ளார்.

கர்நாடகத்தில் நடைபெற்று வந்த காங்கிரஸ் –ஜனதா தளம் ஆட்சி வீழச்சியடைந்ததை தொடர்ந்து பெரும்பான்மை கொண்ட பாஜக  ஆட்சியை பிடித்தது. இதனைத் தொடர்ந்து முன்னாள்  முதல்வர் எடியூரப்பா முதலவ்ராக பொறுப்பேற்றுக்கொண்ட்டார். இதற்கிடையே சமீப காலமாக எடியூரப்பா முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக தகவல்கள் பரவியது.

ஆனால் பாஜக பிரபலங்கள பலரும் இந்த தகவலை மறுத்து வந்த நிலையில், நேற்று திடீரென எடியூரப்பா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இதனால் பாஜகவில் உட்கட்சி பூசல் நடைபெற்றுவருவதாக எதிர்கட்சியினர் பலர் குற்றம் சாட்டி வருகிறது. ஆனால் இந்த குற்றச்சாடடை கண்டுகொள்ளாத பாகஜவினர் அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும் பணியில் இறங்கினளர்.

இதற்காக கர்நாடகம் வந்த பாஜக மேலிட பார்வையாளர்கள் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், மற்றும் கிஷான் ரெட்டி உள்ளிட்ட தலைவர்கள் கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏகளை கூட்டி அடுத்த முதல்வரை தேர்ந்தெடுக்கும்  செயல்முறையில் இறங்கினர். இதில் இன்று மாலை வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில் பாஜகவின் மூத்த தலைவர்களின் ஒருவரான பசுவராஜ் பொம்மை முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளார்.

கர்நாடக முன்னாள் முதல்வர் ஆர்.எஸ்.பொம்மையின் மகனான இவர், கடந்த 2008-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார். தொடர்ந்து இருமுறை மேலவை உறுப்பினராக இருந்த இவர், 3 முறை எம்எல்ஏவாக இருந்துள்ளார். மேலும் முன்னாள் முதல்வர் நெருங்கமான நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Bjp central minister appointed basuvaraj bommai for new cm of karnataka

Next Story
ஆகஸ்ட் மாதம் முதல் குழந்தைகளுக்கு கோவிட்-19 தடுப்பூசி; மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தகவல்covid19
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com