உத்தரபிரதேசத்தில், முஸ்லிம் மதத்தை சேர்ந்த இளைஞரை காதலித்ததாக கூறி, இந்து மதத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவரை பாஜகவின் மகளிர் அணி தலைவர் காவல் நிலையத்தில் வைத்து சரமாரியாக கன்னத்தில் அறைந்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் நௌரங்காபாத்தில் தான் இச்சம்பவம் நடைபெற்றது. ம்லிேல்ர்ும், பகுதியின் பாஜக மகளிர் அணி தலைவர் சங்கீதா வார்ஷ்னே, கடந்த செவ்வாய் கிழமை இந்து மதத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், முஸ்லிம் மதத்தை சேர்ந்த இளைஞரை காதலிப்பதாகவும், அடிக்கடி அந்த இளைஞருடன் பொது இடங்களுக்கு செல்வதாகவும் கூறி அப்பெண்ணை காவல் நிலையத்தில் கன்னத்தில் சரமாரியாக அடித்தார். இச்சம்பவம், கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. இதனை, அங்கிருந்த ஒருவர் வீடியோவாக எடுத்த நிலையில், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோவில் பாஜக் தலைவர் சங்கீதா வார்ஷ்னே தான் அப்பெண்ணை அடிப்பதோடு நிறுத்தாமல், அப்பெண்ணின் தந்தையையும் அழைத்து அவரது மகளை அடிக்குமாறு கூறுகிறார்.
அப்பெண் இளைஞர் ஒருவருடன் பொது இடத்தில் நின்று கொண்டிருந்ததை இந்து யுவ வாஹினி அமைப்பை சேர்ந்தவர்களே முதலில் கண்டறிந்து, அப்பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, காவல் நிலையத்திற்கு சங்கீதா வார்ஷ்னே மற்றும் அப்பெண்ணின் பெற்றோரும் வரவழைக்கப்பட்டனர்.
அந்த வீடியோவில் அப்பெண் கூறும்போது, தான் 18 வயது நிரம்பிய பெண் எனவும், தன்னுடன் பொது இடத்தில் நின்றுகொண்டிருந்தவர் தன் காதலன் மோஹத் ஃபைசன் எனவும் கூறினார். மேலும், இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்து வருவதாகவும், இந்த விஷயம் தனது குடும்பத்தினருக்கு தெரியாது எனவும் ஒப்புக்கொண்டார்.
மேலும், உத்தரபிரதேச பாஜகவின் மகளிர் அணி தலைவராக தான் உள்ளதாக கூறிக்கொள்ளும் சங்கீதா வார்ஷ்னே, அப்பெண் தன் பெற்றோருக்கு தெரியாமல் இவ்வாறு முஸ்லிம் மதத்தை சேர்ந்த இளைஞரை அடிக்கடி சந்திப்பது தவறு எனக்கூறி கன்னத்தில் அடித்தார். மேலும், அப்பெண்ணை அடிக்கும்போது, “அந்த மதத்தினர் நம்பத்தகுந்தவர்கள் இல்லை. எல்லோருக்கும் இம்மாதிரியான உறவுகளின் முடிவு என்ன என தெரியும்”, என கூறிக்கொண்டே அடித்தார்.
இந்நிலையில், அப்பெண்ணின் காதலர் மோஹத் ஃபைசன் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சங்கீதா வார்ஷ்னே பாஜக மகளிர் அணி தலைவராக தற்போது இல்லை என அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.
OUTRAGEOUS: BJP neta assaults a "major" girl just because she ws sipping tea with her Muslim friend at a restro in Aligarh. @Uppolice pl act pic.twitter.com/s0PL6PEFST
— Prashant Kumar (@Prashant_TN) 20 September 2017
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.