பாஜக எம்.பி. சன்வர்லால் காலமானார்!

பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சன்வர்லால் டெல்லியில் இன்று காலமானார்.

பாரதிய ஜனதா கட்சியின் எம்.பி.யும், முன்னாள் மத்திய அமைச்சருமான சன்வர்லால் டெல்லியில் இன்று காலமானார். அவருக்கு வயது 62. இவர் ராஜஸ்தானின் அஜ்மீர் தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வானவர்.

உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சன்வர்லால், மருத்துவமனையிலேயே இறந்தார். 2014 நவம்பர் முதல் 2016 ஜூலை வரை மத்திய நீர்வளத் துறை இணையமைச்சராக சன்வர்லால் பதவி வகித்தார்.

முன்னதாக, பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா கடந்த ஜூலை மாதம் ராஜஸ்தானில் 3 நாட்களுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது இரண்டாவது நாளின் போது, ஒரு நிகழ்ச்சியில் அமித் ஷா மேடையில் உரையாற்றிக் கொண்டிருக்கையில், மாரடைப்பு ஏற்பட்டு சன்வர்லால் அங்கேயே மயங்கி விழுந்தார். உடனே ராஜஸ்தான் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, அவர் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close