/tamil-ie/media/media_files/uploads/2017/06/a589.jpg)
தலித் பின்னணி கொண்ட பீஹார் கவர்னர் ராம்நாத் கோவிந்த் பாஜகவின் குடியரசுதலைவர் வேட்பாளராக இன்று அறிவிக்கப்பட்டுள்ளார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா இதனை அறிவித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் மன்மோகன் சிங்கிடம், பிரதமர் மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஆதரவு கேட்டுள்ளார். அதேபோல், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடமும் தொலைபேசியில் பேசிய மோடி, ராம்நாத் கோவிந்திற்கு ஆதரவு தருமாறு வேண்டியுள்ளார்.
இந்நிலையில், பாஜக வேட்பாளர் ராம்நாத் கோவிந்திற்கு ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர்கள் தங்களது ஆதரவினைத் தெரிவித்துள்ளனர்.
June 2017Congratulations to Shri Ramnath Kovind ji on being announced as the Presidential candidate of NDA (National Democratic Alliance). pic.twitter.com/pufVBCOrEH
— Amit Shah (@AmitShah)
Congratulations to Shri Ramnath Kovind ji on being announced as the Presidential candidate of NDA (National Democratic Alliance). pic.twitter.com/pufVBCOrEH
— Amit Shah (@AmitShah) June 19, 2017
ராம்நாத், பாஜகவின் தலித் போர்ச்சா அமைப்பின் தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நாளை மாலை 5 மணிக்கு ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடியை நேரில் சந்திக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.