scorecardresearch

ட்விட்டரில் பிரதமர் மோடியை ‘ப்ளாக்’ செய்யும் வித்தியாசமான போராட்ட முறை: டாப் ட்ரெண்டிங்கில் #BlockNarendraModi

இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தை பலரும் ‘ப்ளாக்’ செய்து வருகின்றனர். #BlockNarendraModi என்ற ஹேஷ் டேக் ட்ரெண்டிங்.

ட்விட்டரில் பிரதமர் மோடியை ‘ப்ளாக்’ செய்யும் வித்தியாசமான போராட்ட முறை: டாப் ட்ரெண்டிங்கில் #BlockNarendraModi

மூத்த பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், வலதுசாரி அமைப்புகளை சேர்ந்த பலர் அவரது கொலைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும், கவுரி லங்கேஷை இழிவாக பேசியும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தை பலரும் ‘ப்ளாக்’ செய்து வருகின்றனர்.

கவுரி லங்கேஷின் படுகொலையை நியாயப்படுத்தி ட்விட்டரில் பதிவிட்டவர்களில், நிகில் தாதிச் என்பவரும் ஒருவர். அதில், கவுரி லங்கேஷை கடுமையாகவும், இழிவாகவும் விமர்சித்திருந்தார். அந்நபரை வலதுசாரிய அமைப்புகளை சேர்ந்தவர்களும், பாஜகவினர் பலரும் ட்விட்டரில் பின் தொடர்கின்றனர். முக்கியமாக, பிரதமர் மோடியும் அந்நபரை பின் தொடர்ந்து வருகிறார்.

இந்நிலையில், நிகில் தாதிச்-ஐ ட்விட்டரில் பின் தொடர்வதை நிறுத்த வேண்டும் எனவும், அவரை பின் தொடர்வதற்காக பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியும், பிரதமர் மோடியின் ட்விட்டர் பக்கத்தை பலரும் ‘ப்ளாக்’ செய்து வருகின்றனர். இக்கட்டுரை எழுதும் நேரத்தில் ட்விட்டரில், #BlockNarendraModi என்ற ஹேஷ் டேக் மூன்றாவது இடத்தில் ட்ரெண்டிங்கில் இருந்தது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Blocknarendramodi pm following twitter trolls abusing gauri lankesh prompts hashtag in protest