பெட்ரோல், டீசல் விலையை ஜி.எஸ்.டி வரிக்குள் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். ஜி.எஸ்.டி என்னும் சரக்கு மற்றும் சேவை வ விதிப்பானது கடந்த ஜூலை முதல் அமல்படுத்தப்பட்டது. ஜி.எஸ்.டி வரியைப் பொறுத்தவரியில் 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என நான்கு வகையிலான வரி விதிப்பு உள்ளன. இதற்கு அடுத்து செஸ் வரி உள்ள நிலையில், சில பொருட்களுக்கு ஜி.எஸ்.டி-யில் இருந்து விலக்கும் அளிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி-யில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்கள் குறித்து விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி சில நாட்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் ஜி.எஸ்.டி தொடர்பாக பல்வேறு கருத்துகளை தெரிவித்திக்கிறார். அதில் அவர் தெரிவித்துள்ளதாவது: ஏழை மக்களை பாதிக்கும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி-க்குள் கொண்டு வராதது ஏன்? பெட்ரோல், டீசல் விற்பனையின் மூலம் மத்திய அரசு ரூ.273,000 கோடி லாபம் ஈட்டி வருகிறது. மக்களிடம் இருந்து அதிக லாபம் பெற வேண்டும் என்பதை கைவிட்டுவிட்டு, ஜி.எஸ்.டி விரிக்குள் பெட்ரோல், டீசலை கொண்டு வர வேண்டும்.
பிரதமர் மோடியின் தேர்தல் ஆதாயத்திற்காக ஜி.எஸ்.டி சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி வரிவிதிப்பால் வியாபாரிகள், மற்றும் சிறு, குறு தொழில் முனைவோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், செல்வந்தர்கள் லாபம் அடைகின்றனர். விவசாயப் பொருட்களான, பூச்சிக்கொல்லி மருந்து, உரம் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் ஜி.எஸ்.டி வரிக்குள் வருவதனால், விவசாயிகள் கடும் துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். வரி விதிப்பை எளிமையானதாக மாற்றி, ஒரே தேசம், எழு வரி விதிப்பு என்பதனை சரி செய்வதற்கான தருணம் இது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.