உ.பி.யில் நிகழ்ந்த அதிகாலை கோரம்; 22 பேர் பலி!

UPSRTC-ன் பேருந்தும், லாரியும் இன்று 1.00 மணியிலிருந்து 1.30 மணிக்குள் மோதியிருக்க வேண்டும்

உத்தரப்பிரதேச மாநிலம் பரேலியில் இன்று அதிகாலை ஒரு மணியளவில், கோண்டா நோக்கிச் சென்றுக் கொண்டிருந்த அம்மாநில அரசுப் பேருந்து, தேசிய நெடுஞ்சாலை 24-ல் டிராக்டருடன் மோதியது. இதனால், பேருந்து தீ பிடித்து எரிய தொடங்கியது. பயணிகள் அயர்ந்து தூங்கிய போது இந்த விபத்து நேரிட்டதால், அவர்களால் உடனடியாக தப்பிக்க முடியவில்லை. இருப்பினும் சிலர் ஜன்னல்களை உடைத்து தப்பினர். ஆனால், தப்பிக்க முடியாத 22 பயணிகள் பலியாகி இருப்பதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், காயமடைந்துள்ள 15 பேர் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து போலீஸ் மூத்த அதிகாரி ஜோகேந்திர குமார் அளித்த பேட்டியில், ” UPSRTC-ன் பேருந்தும், லாரியும் இன்று 1.00 மணியிலிருந்து 1.30 மணிக்குள் மோதியிருக்க வேண்டும். 22 பயணிகள் உயிரிழந்துவிட்டனர். 15 பேர் காயமடைந்துள்ளனர். அதில், 6 பேர் மிகவும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்” என்றார்.

மொத்தம் 41 பயணிகள் அந்தப் பேருந்தில் பயணம் செய்திருக்கின்றனர். பேருந்து டிரைவர் இறந்துவிட்டார். நடத்துனர் காயத்துடன் தப்பியுள்ளார். ஆனால், லாரியின் டிரைவர் தப்பிச் சென்றுவிட்டார், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தோர் குடும்பத்திற்கு 2 லட்ச ரூபாயும், காயமடைந்துள்ளவர்களுக்கு 50,000 ரூபாயும் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

×Close
×Close