மத்திய அரசின் வாதம் இல்லாமல் காவிரி வழக்கு முற்றுபெறாது என உச்ச நிதிமன்றம் தெரிவித்துள்ளது. கர்நாடகா, தமிழகம், கேரளா, பாண்டிச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான விசாரணையில், கடந்த 2017-ம் ஆண்டு நடுவர் நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கியது. இதைஎதிர்த்து தமிழகம், கேரளா,கர்நாடக உள்ளிட்ட மாநிலங்கள் மேல்முறையீடு செய்தன. இது தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 11-ம் தேதி முதல் இந்த இறுதிக்கட்ட விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக தமிழகத்தின் சார்பில் வழக்கறிஞர் சேகர் நாப்டே வாதிடும்போது, காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் வாதத்தை மறுத்து வாதிட தமிழக அனுமதி வழங்க வேண்டும் என்றும், இதற்காக கூடுதலாக மேலும் ஒருநாள் அவகாசம் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 4 மாநிலங்களைச் சேர்ந்த நிபுணர்கள் வரும் 20-ம் தேதி வாதிட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதோடு, தமிழகம், கர்நாடக நிபுணர்களுக்கு தலா 30 நிமிடமும், கேரளாவிற்கு 20 நிமிடமும், புதுச்சேரிக்கு 10 நிமிடமும் வாதிட நேரம் ஒதுக்கப்படுவதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், மத்திய அரசின் வாதம் இல்லாமல் இந்த வழக்கு முற்றுபெறாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.