scorecardresearch

தமிழகத்திற்கு 9.19 டி.எம்.சி.தண்ணீர் : கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவு

தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குரிய பங்கான 9.19 டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகா வழங்க, காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Tamil Nadu news today live updates, Tamil Nadu news today in tamil, chennai news today in tamil, tamil nadu weather, tamil nadu crime, news in tamil, tamil news live,
Tamil Nadu news today live updates, Tamil Nadu news today in tamil, chennai news today in tamil, tamil nadu weather, tamil nadu crime, news in tamil, tamil news live,

தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்குரிய பங்கான 9.19 டி.எம்.சி. தண்ணீரை, கர்நாடகா வழங்க, காவிரி மேலாண்மை வாரியம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளா, புதுச்சேரி மாநிலங்கள் காவிரி நீரை பகிர்ந்து கொள்ள காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் காவிரி நீர் ஒழுங்காற்று குழு ஆகியவற்றை உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மத்திய அரசு அமைத்தது. இந்த 4 மாநிலங்களும் இரு அமைப்புகளுக்கு தங்களது தரப்பில் தலா ஒரு பிரதிநிதியை நியமித்து உள்ளன.

காவிரி மேலாண்மை ஆணையம் இதுவரை 2 முறை கூடி இருக்கிறது. கடைசியாக கடந்த ஆண்டு டிசம்பர் 3-ம் தேதி கூடியது. ஒழுங்காற்று குழு கூட்டம் கடைசியாக 23-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில், மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு குறைவாக இருப்பதால் கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே சமாளிக்க முடியும் என தமிழக அதிகாரிகள் வாதிட்டனர். ஆனால் அதுபற்றி அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்நகலையில், காவிரி மேலாண்மை வாரிய கூட்டம், தலைநகர் டில்லியில் அதன் தலைவர் மசூத் உசைன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக பிரதிநிதிகள், குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை திறந்துவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தமிழகத்திற்கு ஜூன் மாதத்திற்கான 9.19 டி.எம்.சி தண்ணீரை இந்த மாத இறுதிக்குள் திறந்து விட கர்நாடகாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Cauvery management board orders to karnataka to open 9 tmc water to tamilnadu