வெளியானது சி.பி.எஸ்.இ. 10-ஆம் வகுப்பு ரிசல்ட்! தேர்ச்சி விகிதம் குறைவு!

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சி.பி.எஸ்.இ. 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 16,67,573 லட்சம் மாணவர்கள் பங்கேற்றனர். இதன் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாவதாக இருந்தது. ஆனால், மதிப்பெண் பட்டியல் இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டதால் இன்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது.

அலகாபாத், சென்னை, டெல்லி, டேராடூன், திருவனந்தபுரம் உள்ளிட்ட மண்டலங்களுக்கான தேர்வு முடிவுகள் மட்டும்தான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மற்ற மண்டலத்துக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இந்த 10-ஆம் வகுப்பு தேர்வில் 90.95 சதவிகிதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டை விட 6 சதவிகிதம் குறைவாக்கும். தேர்ச்சி விகிதத்தில் திருவனந்தபுரம் முதல் இடம் பிடித்துள்ளது. சென்னை மண்டலம் இரண்டாம் இடம் பிடித்துள்ளது.

மாணவர்கள்  www.results.nic.in, www.cbseresults.nic.in, மற்றும் www.cbse.nic.in ஆகிய இணையதளங்களில் முடிவுகளை அறியலாம். மேலும், www.bing.com என்ற தளத்திலும் ரிசல்ட்டை பார்க்கலாம்.

எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகளை அறிய:

‘CBSE 10 [rollno]’ என டைப் செய்து கீழ்கண்ட நெட்வொர்க் வைத்திருப்பவர்கள் அந்தந்த நம்பர்களுக்கு அனுப்பி முடிவுகளை அறியலாம்.

52001 (MTNL), 57766 (BSNL), 5800002 (Aircel), 55456068 (Idea), 54321, 51234 and 5333300 (Tata Teleservices), 54321202 (Airtel), and 9212357123 (National Informatics Centre).

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close