Advertisment

CBSE 10th Result 2018 Date: சிபிஎஸ்இ 10 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு!

CBSE 10th Result 2018 Date: www.cbse.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று மதிப்பெண்களை பெறலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CBSE 10th Result 2018 Date: சிபிஎஸ்இ 10 வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று மாலை 4 மணிக்கு!

CBSE 10th Result 2018 Date: சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(29.5.18) மாலை 4 மணிக்கு வெளியிடப்படும் என்று சிபிஎஸ்இ அதிகாரப்பக்கமான ww.cbseresults.nic.in தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

சிபிஎஸ்இ என அழைக்கப்படும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளில் பத்தாம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 5ம் தேதி தொடங்கியது. கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 2017-ஆம் ஆண்டு வரை சுமார் 7 ஆண்டு காலமாக 10-ம் வகுப்புத் தேர்வு கட்டாய பொதுத் தேர்வாக நடத்தப்படவில்லை. மாணவர்கள் விரும்பினால் பொதுத் தேர்வாகவும், இல்லாவிட்டால் பள்ளி அளவிலான வருடாந்திரத் தேர்வாகவும் எழுதிக்கொள்ளலாம். இந்த ஆண்டிலிருந்து முன்பு இருந்ததைப் போன்று கட்டாய பொதுத் தேர்வாக மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில்,நாடு முழுவதும், 16,38,428 மாணவ, மாணவியர் இந்த வருடம் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இந்நிலையில், இன்று மாலை 4 மணிக்கு தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தேர்வு எழுதிய மாணவர்கள் www.cbse.nic.in என்ற இணையதளத்திற்கு சென்று மதிப்பெண்களை பெறலாம்.

இதுதவிர, cbse.examresults.net , results.nic.in/index , cbseresults.nic.in, results.gov.in போன்ற வலைதளங்கள் வாயிலாகவும், சிபிஎஸ்இ 10ம் தேர்வு முடிவுகளை பெறலாம் என சிபிஎஸ்இ நிர்வாகம் கூறியுள்ளது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment