”திறமையான 1,000 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.75,000 உதவித்தொகை”: மத்திய அமைச்சர் அறிவிப்பு

திறமையான 1,000 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.75,000 ‘பிரதம மந்திரி உதவித்தொகை’ திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

திறமையான 1,000 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.75,000 ‘பிரதம மந்திரி உதவித்தொகை’ திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும் என மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

author-image
Nandhini v
புதுப்பிக்கப்பட்டது
New Update
Eminence Tag

Prakash Javadekar

திறமையான 1,000 மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.75,000 ‘பிரதம மந்திரி உதவித்தொகை’ திட்டத்தின் கீழ் உதவித்தொகை வழங்கப்படும் என, மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

Advertisment

மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஜெய்ப்பூரில் உள்ள மணிபால் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், திறமையான மானவர்களுக்கு மாதந்தோறும் ரூ.75,000 உதவித்தொகை கிடைக்கும் வகையில் ‘பிரதம மந்திரி உதவித்தொகை’ திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

”இந்த பிரதம மந்திரி உதவித்தொகை திட்டம் குறித்து அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படும்.”, என பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

மேலும், நிகழ்ச்சியில் பேசிய அவர் அறிவு மற்றும் திறன்கள் மட்டுமல்லாமல் நல்ல மனிதர்களாகவும் உருவெடுக்க வேண்டும் என மாணவர்களை அறிவுறுத்தினார். பிரதமரின் ‘புதிய இந்தியா’ பிரச்சாரம் குறித்து பேசிய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிரதமர் இளைஞர்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாகவும், நாட்டில் கல்வியின் தரத்தை உயர்த்த ஆர்வத்துடன் இருப்பதாகவும் தெரிவித்தார். கல்வியின் தரத்தை உயர்த்துவதற்காக இந்திய மாணவர்கள் இங்கேயே படித்து நாட்டின் வளர்ச்சிக்கு உதவிபுரியும் வகையில் 20,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என கூறினார். 20 உலக தரத்திலான பல்கலைக்கழகங்களை அமைக்கவும், அந்த பல்கலைக்கழகங்கள் உலகத்திலேயே சிறந்த 200 பல்கலைக்கழகங்களின் கீழ் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Advertisment
Advertisements

“நமது நாட்டில் உள்ள அறிவார்ந்தவர்கள் எல்லோரும் ஏன் வெளிநாட்டுக்கு செல்கிறார்கள் என நான் அதிசயிக்கிறேன். ஏனென்றால், இங்கு அவர்களுக்கு 3 பிரச்சனைகள் உள்ளன. முதலாவதாக, வெளிநாடுகளில் அவர்களுக்கு சிறந்த ஆய்வகங்கள் இருக்கின்றன. அடுத்ததாக, தங்கள் செலவீனங்களை சமாளிக்க அவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது. மூன்றாவது, சிறந்த வழிகாட்டி.”, என கூறினார். இந்த மூன்றும் அம்சங்களையும் இந்தியாவில் கிடைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறினார்.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: