/indian-express-tamil/media/media_files/pgPlxkyu2BB9SWZ114lo.jpg)
முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார்
உத்தரப் பிரதேசம், கோண்டாவில் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் வியாழக்கிழமை தடம் புரண்டு விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். முதல்வர் யோகி ஆதித்யநாத் சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார்.
ஆங்கிலத்தில் படிக்க: Chandigarh-Dibrugarh Express Accident Live Updates:
உத்தரப் பிரதேசத்தின் கோண்டா மாவட்டத்தில் வியாழக்கிழமை பிற்பகல் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு பல பெட்டிகள் கவிழ்ந்ததில் இதுவரை 4 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. “சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் உத்தரபிரதேசத்தில் கோண்டா அருகே பிற்பகல் 2.35 மணியளவில் தடம் புரண்டது என்று ரயில்வே அதிகாரிகள் கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், சம்பவ இடத்தில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை உடனடியாக மேற்கொள்ள உத்தரவிட்டார். உதவிக்கு அவசர உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
லக்னோ மற்றும் பல்ராம்பூரிலிருந்து தலா ஒரு தேசிய பேரிடர் மீட்புப் படைக் குழு கோண்டாவில் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக உ.பி நிவாரண ஆணையர் ஜி.எஸ். நவீன் குமார் தெரிவித்தார். மீட்புப் பணிகளுக்காக 5 ஆம்புலன்ஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. மேலும், சம்பவ இடத்திற்கு ஆம்புலன்ஸ்களை அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வருகின்றனர் என்று நவீன் குமார் கூறினார்.
கோண்டாவில் சண்டிகர் - திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து நடந்த இடத்தில், மீட்புப் பணிகளை மேற்பார்வையிட கோண்டா மாவட்ட ஆணையர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.