ரக்‌ஷா பந்தன்: மரங்களுக்கு ராக்கி கட்டி கொண்டாடிய சிறுவர், சிறுமிகள்

உத்தரப்பிரதேசத்தில், மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க உறுதிமொழி ஏற்கும் விதமாக, சிறுவர், சிறுமிகள் மரங்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி ரக்‌ஷா பந்தனை கொண்டாடினர்.

உத்தரப்பிரதேசத்தில், மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க உறுதிமொழி ஏற்கும் விதமாக, சிறுவர், சிறுமிகள் மரங்களுக்கு ராக்கி கயிறுகளை கட்டி ரக்‌ஷா பந்தனை கொண்டாடி வருகின்றனர்.

அண்ணன் – தங்கை உறவுகளைக் கொண்டாடுவதற்காக வட மாநிலங்களில் இந்துக்களால் கொண்டாடப்பட்டு வரும் தினமாகும். அன்றைய தினம் சகோதரிகள் அனைவரும் தங்கள் சகோதரர்களின் கையில் வண்ணமயமான ‘ராக்கிகள்’ எனும் கயிற்றை கட்டி மகிழ்வர். சகோதரர்கள் தங்கள் சகோதரிகளை வாழ்நாள் முழுதும் பாதுகாப்பேன் என உறுதிக்கூறும் நிகழ்வே ரக்‌ஷா பந்தன். இந்த தினம், தற்போது தென் மாவட்டங்களிலும் பிரபலமாகி வருகிறது. வண்ணமயமான ராக்கிகள் கடைகளில் அணிவகுக்கும்.

இந்தாண்டு ரக்‌ஷா பந்தன் தினம் வரும் 7-ஆம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட உள்ளது. தங்கள் சகோதரர்களுக்காக அழகான ராக்கிகளை வாங்க இப்போதே சகோதரிகள் கடைகளுக்கு படையெடுக்கத் துவங்கிவிட்டனர்.

ரக்‌ஷா பந்தன் அன்று, சகோதரிகளுக்கு, அவர்களின் சகோதரர்கள் தங்களால் முடிந்த பணம் அல்லது ஏதேனும் ஒன்றை பரிசாக வழங்க வேண்டும்.

இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில், சிறுவர், சிறுமிகள் மரங்களுக்கு ராக்கி கட்டி ரக்‌ஷா பந்தன் தினத்தைக் கொண்டாடி வருகின்றனர். மரங்கள் வெட்டப்படுவதை தடுக்கும் வகையில், மரங்களை தங்கள் சகோதர, சகோதரிகளாக பாவித்து ராக்கி கட்டி வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.

×Close
×Close